வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவை வலுப்படுத்த அமெரிக்க மொண்டானா ஆளுநர் நாளை இலங்கை வருகை

arvloshan.com

வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக, அமெரிக்காவின் மொண்டானா (Montana) மாநில ஆளுநர் கிரெக் ஜியான்போர்டே தலைமையிலான தூதுக்குழுவினர் நாளை (09) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

அமெரிக்க மாநிலமான மொண்டானாவின் முதல் பெண்மணி சுசான் ஜியான்போர்டே (Susan Gianforte) மற்றும் முக்கிய அதிகாரிகளும் இந்த விஜயத்தில் பங்கெடுக்கவுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான விவசாய வர்த்தகத்தை விரிவுபடுத்துவதோடு, பாதுகாப்புத்துறையிலான ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதே இந்த விஜயத்தின் முதன்மை நோக்கமாகும் என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு அமெரிக்காவில் அமைந்துள்ள மொண்டானா மாநிலம், கொண்டைக்கடலை, பயறு மற்றும் பட்டாணி உள்ளிட்ட பருப்பு வகைகளின் உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது. இந்நிலையிலேயே, மொண்டானா மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களுக்கு இலங்கையில் புதிய சந்தை வாய்ப்புகளைக் கண்டறிவதற்கும், இரு நாட்டு வணிக சமூகங்களுக்கு இடையிலான வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் ஏதுவாக, உள்ளூர் பருப்பு இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களை இத்தூதுக்குழுவினர் சந்திக்கவுள்ளனர்.

இந்த விஜயம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இலங்கைகான அமெரிக்கத் தூதர் எரிக் மேயர் , பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்த விஜயம் மிக முக்கியமானதொரு மைல்கல் எனக் குறிப்பிட்டுள்ளார். மொண்டானாவின் விவசாய நிலங்கள் முதல் இலங்கையின் இந்தியப் பெருங்கடல் கரைகள் வரை நீளும் இந்த கூட்டுப்பணி, பொருளாதார வாய்ப்புகளையும் பாதுகாப்பையும் இணைப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மொண்டானா தேசியப் பாதுகாப்ப படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் ட்ரெண்டன் கிப்சன் தலைமையிலான பாதுகாப்பு அதிகாரிகளும் இத்தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் செயற்பாட்டிலுள்ள மாநில பங்காளித்துவத் திட்டத்தின் கீழ், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்து இவர்கள் கலந்தாலோசிக்கவுள்ளனர்.

குறிப்பாக, இயற்கை பேரிடர் மேலாண்மை, கடலோரப் பாதுகாப்பு மற்றும் இராணுவப் பயிற்சிகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது. 2025 ஆம் ஆண்டு மொண்டானா தேசியப் பாதுகாப்புப் படைப்பிரிவுக்கும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

சிறைச்சாலை சட்ட விதிகளை திருத்த விசேட குழு நியமனம்

...

arvoshan.com

ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

...

arvoshan.com

அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி: எம்பி சாணக்கியன் பிபிசிக்கு தகவல்!

...

arvoshan.com

1,540 புதிய கிராம நிலதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார் ஜனாதிபதி

...

arvoshan.com

அடுத்த 2-3 ஆண்டுகளில் VAT வரி குறைக்கப்படும்: ஜனாதிபதி அநுர அறிவிப்பு

...

arvoshan.com

சிறைப்பட்ட பௌத்த பிக்குகளுக்கான சட்டவிதிமுறைகளை மீளாய்வு செய்ய ஜனாதிபதி இரு வார கால அவகாசம்!

...

arvoshan.com

அக்குரெகொடை இரட்டைப் படுகொலை: பிரதான சந்தேகநபர் தப்பியோட உதவியவர் கைது!

...

arvoshan.com

சஷீந்திர ராஜபக்‌ஷவின் வழக்கு: ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை நிராகரித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்!

...

arvoshan.com

ஊழல் வழக்குகளில் 16 முன்னாள் அமைச்சர்கள் சிக்கியுள்ளனர்: சுனில் வட்டகல பாராளுமன்றத்தில் தகவல்

...

arvoshan.com

ஆஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை

...

arvoshan.com

2015 முதல் நிலுவையிலுள்ள 50 ஊழல் வழக்குகள்: நாடாளுமன்றத்தில் கோவை சமர்ப்பித்தார் அமைச்சர் பிமல்

...

arvoshan.com

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற விடுதிக்கு 10 லட்சம் அபராதம்!

...

arvoshan.com

விளக்கமறியலில் உள்ள ஷிராந்தி ராஜபக்ஷ நாளை தேசிய கண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தீர்மானம்

...

arvoshan.com

என்.டி.பி வங்கி நிதி மோசடி 13.6 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு: தணிக்கை அறிக்கையில் பரபரப்புத் தகவல்கள்!

...

arvoshan.com

கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை: 22 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு

...