கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை: 22 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
இன்றைய தினம் (08) நாட்டின் மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் கடும் மின்னல் தாக்குதல்கள் இடம்பெறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை (09) அதிகாலை 01:00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையின்படி, 22 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் , 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
குறித்த மாகாணங்களின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாகவும், மழை பெய்யும் வேளையில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.