எச்சரிக்கை : புதிய திரிபுகளுடன் பரவும் டெங்கு நோய்

arvloshan.com

⚡இலங்கையில் தற்போது பரவி வரும் டெங்கு வைரஸானது, கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் புதிய மரபணு மாற்றமடைந்த ஒரு வைரஸாகக் காணப்படுவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஹம்சக்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.

⚡ நேற்று (14) பிற்பகல் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைப் தெரிவித்தார் .

⚡இதுவரை இலங்கையர்களுக்குத் தொற்றிராத ஒரு புதிய வகை டெங்கு திரிபு இம்முறை பரவுவதால், பின்வரும் சவால்கள் எழுந்துள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்:

⚡இந்த புதிய வைரஸுக்கு எதிராக பொதுமக்களின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதால், மிக வேகமாகவும், பெருமளவிலானோருக்கும் இது தொற்றும் அபாயம் உள்ளது.

 ⚡குறிப்பிட்ட கால இடைவெளியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அறிந்து அரசாங்கம் முன்கூட்டியே தயாராக இருந்த போதிலும், இம்முறை பரவும் வைரஸின் தன்மையில் கணிசமான மாற்றங்கள் காணப்படுகின்றன.

⚡இந்த அசாதாரண சூழ்நிலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முழு வீச்சில் இறங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து, அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் 
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் நிலைமை தீவிரமடையாமல் தடுத்து, அவர்கள் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்புவதை உறுதி செய்தல். என இரண்டு முக்கிய இலக்குகளை முன்வைத்தார்:

⚡அரசாங்கத்தின் முயற்சிகளுக்குப் பக்கபலமாக, பொதுமக்கள் தத்தமது சூழலைத் தூய்மையாகப் பேணி, நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என பிரதி அமைச்சர் அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

🦅அறம்     2026,06,15


ஏனைய செய்திகள்

arvoshan.com

2027ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் மேலும் வரிக்குறைப்புகள் – ஜனாதிபதி அநுர குமார அறிவிப்பு!

...

arvoshan.com

காட்டு யானையைப் பிடிக்க அல்லது காயப்படுத்த பொறி வெடி வைத்த நபருக்கு ரூ. 3 இலட்சத்து 10 ஆயிரம் அபராதம்!

...

arvoshan.com

கொழும்பில் 5.96 கோடி ரூபாய் நிதி மோசடி – தனியார் நிறுவன ஊழியர் கைது!

...

arvoshan.com

மீண்டும் இலங்கைக்கு விமான சேவைகளை ஆரம்பிக்கும் மூன்று சர்வதேச விமான நிறுவனங்கள்!

...

arvoshan.com

நவம்பர் 2 முதல் மீண்டும் இணையவழி முன்பதிவு முறை அமுல்!

...

arvoshan.com

திருடனைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட பெண் – திருடப்பட்ட கைப்பேசியை மீட்டார்!

...

arvoshan.com

இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 51.5 சதவீதத்தால் அதிகரிப்பு – 4.5 பில்லியன் டொலரை எட்டியது

...

arvoshan.com

2026ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் பயணங்களுக்காக இலங்கையர்கள் செலவிட்ட தொகை 62% அதிகரிப்பு!

...

arvoshan.com

நாளை முதல் முக்கிய பரிவர்த்தனைகளுக்கு TIN சான்றிதழ் கட்டாயம்!

...

arvoshan.com

ஒக்டோபர் 17ஆம் திகதி நாடளாவிய மின்தடை: நுரைச்சோலை மின் உற்பத்தி அலகின் செயலிழப்பே காரணம் – ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை

...

arvoshan.com

வாட்ஸ்அப் ஊடாகப் பரிசுப் பொதி வழங்குவதாகக் கூறி 14.5 இலட்சம் ரூபாய் மோசடி – பெண் கைது!

...

arvoshan.com

வாகன இறக்குமதிச் செலவில் செப்டம்பரில் 34.4% வீழ்ச்சி!

...

arvoshan.com

நிறுவனங்களுக்கு இறுதி எச்சரிக்கை – ஒரு மில்லியன் ரூபா அபராதம், 10 ஆண்டுகள் சிறை!

...

arvoshan.com

பொதுநலவாய உச்சி மாநாட்டில் இலங்கைத் தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கும் பிரதமர் ஹரிணி!

...

arvoshan.com

தங்கத்தைப் பறிக்க வர்த்தகரை சித்திரவதை செய்த பொலிஸார் – மூன்று அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

...