நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம்: அதிகாரிகள் மிகக் கொடூரமாக அடித்துக் கொலை – பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்

arvloshan.com

நீர்கொழும்பு:

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் வெடித்த வன்முறை மோதல்களின் போது உயிரிழந்த சிறைத்துறை அதிகாரிகள், மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டே உயிரிழந்துள்ளனர் என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது.

கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறை வளாகத்தில் பெரும் கலவரம் வெடித்தது. இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட 24 பேரின் உடல்கள், ஐந்து பேர் கொண்ட விசேட தடயவியல் மருத்துவக் குழுவினரால் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களால் மரணம்
வெளியாகியுள்ள பிரேதப் பரிசோதனை விபரங்களின்படி, உயிரிழந்த சிறை அதிகாரிகள் தங்களின் தலப்பகுதியில் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாகவே மரணமடைந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

மொத்தமாக நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனைகளில் 14 மரணங்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினாலும், 9 மரணங்கள் கடுமையான தாக்குதல்களினாலும் சம்பவித்துள்ளன என மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். எஞ்சிய ஒரு மரணத்திற்கான தெளிவான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. உயிரிழந்தவர்களில் இந்திய நாட்டவர் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த வன்முறையின் போது படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக் காவலர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மரணம் குறித்த விபரங்கள் இன்று (09) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

24 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

நீர்கொழும்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த 28 சடலங்களில், இதுவரை 24 பேரின் பிரேதப் பரிசோதனைகள் முழுமையாக நிறைவடைந்து, உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஏனைய நான்கு சடலங்களுக்கான பரிசோதனைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நீர்கொழும்பு பிரதம நீதவான் ஷிலானி பெரேராவின் உத்தரவின் பேரில், விசேட தடயவியல் மருத்துவ அதிகாரி மருத்துவர் சுஜீவ விக்ரமநாயக்க தலைமையில், மருத்துவர்களான பிரசன்ன அப்புஹாமி, சமந்தா விஜேரத்ன, சமிந்த ராஜபக்ச மற்றும் ரமேஷ் அக்கியாவன்ன ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட குழுவே இப்பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மரணங்கள் குறித்த முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்ற நிகழ்விடமாக மாறிய சிறைச்சாலை: கைதிகள் இடமாற்றம்?

இதேவேளை, வன்முறை வெடித்த நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகம் தற்பொழுது ஒரு 'குற்ற நிகழ்விடமாக' (Crime Scene) அறிவிக்கப்பட்டு, பொலிஸாரால் முற்றாகக் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அங்கு தொடர்ந்து கைதிகளைத் தடுத்து வைப்பது விசாரணைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், கைதிகளை மாற்று இடங்களுக்கு நகர்த்த சிறைச்சாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கலவரத்தினால் சிறைச்சாலையின் உட்கட்டமைப்புகளுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அதற்கான இறுதிச் சேத மதிப்பீட்டு அறிக்கை இன்னும் முழுமை பெறவில்லை என சிறைத்துறை அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான விரிவான பொலிஸ் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

சிறைச்சாலை சட்ட விதிகளை திருத்த விசேட குழு நியமனம்

...

arvoshan.com

ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

...

arvoshan.com

அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி: எம்பி சாணக்கியன் பிபிசிக்கு தகவல்!

...

arvoshan.com

1,540 புதிய கிராம நிலதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார் ஜனாதிபதி

...

arvoshan.com

அடுத்த 2-3 ஆண்டுகளில் VAT வரி குறைக்கப்படும்: ஜனாதிபதி அநுர அறிவிப்பு

...

arvoshan.com

சிறைப்பட்ட பௌத்த பிக்குகளுக்கான சட்டவிதிமுறைகளை மீளாய்வு செய்ய ஜனாதிபதி இரு வார கால அவகாசம்!

...

arvoshan.com

அக்குரெகொடை இரட்டைப் படுகொலை: பிரதான சந்தேகநபர் தப்பியோட உதவியவர் கைது!

...

arvoshan.com

சஷீந்திர ராஜபக்‌ஷவின் வழக்கு: ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை நிராகரித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்!

...

arvoshan.com

ஊழல் வழக்குகளில் 16 முன்னாள் அமைச்சர்கள் சிக்கியுள்ளனர்: சுனில் வட்டகல பாராளுமன்றத்தில் தகவல்

...

arvoshan.com

ஆஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை

...

arvoshan.com

2015 முதல் நிலுவையிலுள்ள 50 ஊழல் வழக்குகள்: நாடாளுமன்றத்தில் கோவை சமர்ப்பித்தார் அமைச்சர் பிமல்

...

arvoshan.com

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற விடுதிக்கு 10 லட்சம் அபராதம்!

...

arvoshan.com

விளக்கமறியலில் உள்ள ஷிராந்தி ராஜபக்ஷ நாளை தேசிய கண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தீர்மானம்

...

arvoshan.com

என்.டி.பி வங்கி நிதி மோசடி 13.6 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு: தணிக்கை அறிக்கையில் பரபரப்புத் தகவல்கள்!

...

arvoshan.com

கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை: 22 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு

...