சஷீந்திர ராஜபக்‌ஷவின் வழக்கு: ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை நிராகரித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்!

arvloshan.com

கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்‌ஷ உட்பட மூவருக்கு எதிராக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்தங்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு தொடர்பான ஆரம்பகட்ட எதிர்ப்புக் ஆட்சேபனைகளை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், தற்போதைய குற்றப்பத்திரிகையின் கீழ் வழக்கை தொடர்ந்து நடாத்துவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளின் போது சேதமடைந்த சொத்துக்களுக்காக, நிராகரிக்கப்பட்ட இழப்பீட்டுக் கோரிக்கையையும் மீறி, தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி 8.85 மில்லியன் ரூபாவை இழப்பீடாகப் பெற்றுக் கொண்டனர் என்பதே பிரதிவாதிகள் மீதான முதன்மைச் குற்றச்சாட்டாகும்.

செவனகல பகுதியில் இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கட்டடம் மற்றும் சொத்துக்களே குறித்த வன்முறைச் சம்பவங்களின் போது சேதமடைந்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த இழப்பீட்டுக் கோரிக்கை ஆரம்பத்தில் அதிகாரபூர்வமாக நிராகரிக்கப்பட்ட போதிலும், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் சில அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, பிரதிவாதிகள் இந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்‌ஷ உள்ளிட்ட மூவருக்கும் எதிராக ஊழல் புரிந்தமை மற்றும் அதற்குத் துணைநின்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதிவாதிகளினால் முன்வைக்கப்பட்ட ஆரம்பகட்ட ஆட்சேபனைகள் அனைத்தும் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றில் தொடர்ந்து நடைபெறவுள்ளன.


ஏனைய செய்திகள்

arvoshan.com

சிறைச்சாலை சட்ட விதிகளை திருத்த விசேட குழு நியமனம்

...

arvoshan.com

ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

...

arvoshan.com

அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி: எம்பி சாணக்கியன் பிபிசிக்கு தகவல்!

...

arvoshan.com

1,540 புதிய கிராம நிலதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார் ஜனாதிபதி

...

arvoshan.com

அடுத்த 2-3 ஆண்டுகளில் VAT வரி குறைக்கப்படும்: ஜனாதிபதி அநுர அறிவிப்பு

...

arvoshan.com

சிறைப்பட்ட பௌத்த பிக்குகளுக்கான சட்டவிதிமுறைகளை மீளாய்வு செய்ய ஜனாதிபதி இரு வார கால அவகாசம்!

...

arvoshan.com

அக்குரெகொடை இரட்டைப் படுகொலை: பிரதான சந்தேகநபர் தப்பியோட உதவியவர் கைது!

...

arvoshan.com

ஊழல் வழக்குகளில் 16 முன்னாள் அமைச்சர்கள் சிக்கியுள்ளனர்: சுனில் வட்டகல பாராளுமன்றத்தில் தகவல்

...

arvoshan.com

ஆஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை

...

arvoshan.com

2015 முதல் நிலுவையிலுள்ள 50 ஊழல் வழக்குகள்: நாடாளுமன்றத்தில் கோவை சமர்ப்பித்தார் அமைச்சர் பிமல்

...

arvoshan.com

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற விடுதிக்கு 10 லட்சம் அபராதம்!

...

arvoshan.com

விளக்கமறியலில் உள்ள ஷிராந்தி ராஜபக்ஷ நாளை தேசிய கண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தீர்மானம்

...

arvoshan.com

என்.டி.பி வங்கி நிதி மோசடி 13.6 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு: தணிக்கை அறிக்கையில் பரபரப்புத் தகவல்கள்!

...

arvoshan.com

கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை: 22 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு

...

arvoshan.com

ஞானசார தேரருக்கு சிறை ஆடை: ஐ.தே.க (UNP) கடும் எதிர்ப்பு!

...