குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற விடுதிக்கு 10 லட்சம் அபராதம்!

arvloshan.com

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட (MRP) மேலதிக தொகைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்த குற்றத்திற்காக, கிளஸ்டர் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்திற்கு சொந்தமான பண்டாரவளை ஓய்வு விடுதிக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் (CAA) தொடரப்பட்ட வழக்கில், குறித்த நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் ஒக்டோபர் 07 ஆம் திகதி இந்த தண்டப் பணத்தை விதித்து உத்தரவிட்டது.

கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இசம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரசாங்கத்தினால் 120 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட ஒரு லீற்றர் குடிநீர் போத்தல் ஒன்று, அங்கு 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

அனுமதிக்கப்பட்ட விலையை விட 80 ரூபாய் மேலதிகமாக, அதாவது சட்டப்பூர்வமான விலையை விட சுமார் 67 சதவீதம் அதிக விலைக்கு இந்த குடிநீர் போத்தல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, இந்த 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்கள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்களும் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை இதன்போது நினைவூட்டியுள்ளது.

மேலும், கட்டுப்பாட்டு விலைக்குட்பட்ட பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும், வர்த்தகர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் 1977 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தின் (Hotline) ஊடாக அலுவலக நேரத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்யுமாறும் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

சிறைச்சாலை சட்ட விதிகளை திருத்த விசேட குழு நியமனம்

...

arvoshan.com

ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

...

arvoshan.com

அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி: எம்பி சாணக்கியன் பிபிசிக்கு தகவல்!

...

arvoshan.com

1,540 புதிய கிராம நிலதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார் ஜனாதிபதி

...

arvoshan.com

அடுத்த 2-3 ஆண்டுகளில் VAT வரி குறைக்கப்படும்: ஜனாதிபதி அநுர அறிவிப்பு

...

arvoshan.com

சிறைப்பட்ட பௌத்த பிக்குகளுக்கான சட்டவிதிமுறைகளை மீளாய்வு செய்ய ஜனாதிபதி இரு வார கால அவகாசம்!

...

arvoshan.com

அக்குரெகொடை இரட்டைப் படுகொலை: பிரதான சந்தேகநபர் தப்பியோட உதவியவர் கைது!

...

arvoshan.com

சஷீந்திர ராஜபக்‌ஷவின் வழக்கு: ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை நிராகரித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்!

...

arvoshan.com

ஊழல் வழக்குகளில் 16 முன்னாள் அமைச்சர்கள் சிக்கியுள்ளனர்: சுனில் வட்டகல பாராளுமன்றத்தில் தகவல்

...

arvoshan.com

ஆஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை

...

arvoshan.com

2015 முதல் நிலுவையிலுள்ள 50 ஊழல் வழக்குகள்: நாடாளுமன்றத்தில் கோவை சமர்ப்பித்தார் அமைச்சர் பிமல்

...

arvoshan.com

விளக்கமறியலில் உள்ள ஷிராந்தி ராஜபக்ஷ நாளை தேசிய கண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தீர்மானம்

...

arvoshan.com

என்.டி.பி வங்கி நிதி மோசடி 13.6 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு: தணிக்கை அறிக்கையில் பரபரப்புத் தகவல்கள்!

...

arvoshan.com

கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை: 22 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு

...

arvoshan.com

ஞானசார தேரருக்கு சிறை ஆடை: ஐ.தே.க (UNP) கடும் எதிர்ப்பு!

...