மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான ரோஹித ராஜபக்ஷ, இன்றைய தினம் (25) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்.
மிரிஹானை பகுதியில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்களில் 19 மில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு விவகாரத்தில், தற்போது விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, வாக்குமூலம் அளிப்பதற்காக ரோஹித ராஜபக்ஷவிற்குப் பணியகத்தினால் முன்னதாக ஆணையிடப்பட்டிருந்தது. இதற்கமையவே, குறித்த நிதி விவகாரங்கள் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று காலை விசாரணை அதிகாரிகளுக்கு முன்னால் முன்னிலையாகியுள்ளார்.