ஊழல் வழக்குகளில் 16 முன்னாள் அமைச்சர்கள் சிக்கியுள்ளனர்: சுனில் வட்டகல பாராளுமன்றத்தில் தகவல்

arvloshan.com

கடந்த 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய புலனாய்வுகளில் 16 முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர், குறித்த காலப்பகுதியில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கையாளப்பட்ட வழக்குகளில் மூன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள், ஒரு முன்னாள் முதலமைச்சர், முன்னாள் அமைச்சர்களின் நான்கு மனைவிகள், ஏழு பிள்ளைகள் மற்றும் ஆறு உள்ளூராட்சி மன்றத் தலைவர்களும் உள்ளடங்குவதாகக் குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமன்றி, அவர்களது சகாக்கள் வரை ஊழல் விரிவடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், அரசியல்வாதிகளின் சாரதிகளாகப் பணியாற்றியவர்கள் கூட இலஞ்சக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

அரசு நிறுவனங்களின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்கு தற்போதைய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளே, ஊழல் எதிர்ப்பு விசாரணைகளின் இந்த முன்னேற்றத்திற்குக் காரணம் என பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டில் ஊழல் எதிர்ப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும், கடந்த ஆட்சியின் கீழ் அதனைச் சரிவர நடைமுறைப்படுத்துவது புறக்கணிக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம் தேவையான வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சுயாதீனத்தைப் பலப்படுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் விசாரணைகளை மிகவும் பயனுள்ள முறையில் முன்னெடுக்க முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதில் நிறுவனங்களின் சுயாதீனம் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த நடவடிக்கைகள் நிரூபித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

சிறைச்சாலை சட்ட விதிகளை திருத்த விசேட குழு நியமனம்

...

arvoshan.com

ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

...

arvoshan.com

அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி: எம்பி சாணக்கியன் பிபிசிக்கு தகவல்!

...

arvoshan.com

1,540 புதிய கிராம நிலதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார் ஜனாதிபதி

...

arvoshan.com

அடுத்த 2-3 ஆண்டுகளில் VAT வரி குறைக்கப்படும்: ஜனாதிபதி அநுர அறிவிப்பு

...

arvoshan.com

சிறைப்பட்ட பௌத்த பிக்குகளுக்கான சட்டவிதிமுறைகளை மீளாய்வு செய்ய ஜனாதிபதி இரு வார கால அவகாசம்!

...

arvoshan.com

அக்குரெகொடை இரட்டைப் படுகொலை: பிரதான சந்தேகநபர் தப்பியோட உதவியவர் கைது!

...

arvoshan.com

சஷீந்திர ராஜபக்‌ஷவின் வழக்கு: ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை நிராகரித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்!

...

arvoshan.com

ஆஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை

...

arvoshan.com

2015 முதல் நிலுவையிலுள்ள 50 ஊழல் வழக்குகள்: நாடாளுமன்றத்தில் கோவை சமர்ப்பித்தார் அமைச்சர் பிமல்

...

arvoshan.com

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற விடுதிக்கு 10 லட்சம் அபராதம்!

...

arvoshan.com

விளக்கமறியலில் உள்ள ஷிராந்தி ராஜபக்ஷ நாளை தேசிய கண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தீர்மானம்

...

arvoshan.com

என்.டி.பி வங்கி நிதி மோசடி 13.6 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு: தணிக்கை அறிக்கையில் பரபரப்புத் தகவல்கள்!

...

arvoshan.com

கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை: 22 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு

...

arvoshan.com

ஞானசார தேரருக்கு சிறை ஆடை: ஐ.தே.க (UNP) கடும் எதிர்ப்பு!

...