சிறைச்சாலை சட்ட விதிகளை திருத்த விசேட குழு நியமனம்

arvloshan.com

சிறைச்சாலைகள் அவசரச்சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விதிகள், ஒழுங்குவிதிகள் மற்றும் நிலையான கட்டளைகளை தால்காலிகத் தேவைகளுக்கு ஏற்ப திருத்தியமைத்து புதுப்பிப்பதற்காக விசேட குழுவொன்று இன்று (08) நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டலுக்கு அமைய இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மும்நிகாயக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்கத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவில் பின்வருவோர் அடங்குகின்றனர்:

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாடீர

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் மேலதிக செயலாளர் பியுமந்தி பீரிஸ்

அரச நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்த ஆரியரத்ன

பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜி. சேனாரத்ன

சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க

சிறைச்சாலைகள் அவசரச்சட்டத்தின் கீழ் தற்போதுள்ள விதிகள், ஒழுங்குவிதிகள் மற்றும் நிலையான கட்டளைகளை அவ்வப்போது மறுஆய்வு செய்து, தற்போதைய சமய, கலாசார, சட்ட, நிருவாக மற்றும் நடைமுறைத் தேவைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அவற்றை புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டே இச்செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைத் தொகுதி முழுவதிலும் வினைத்திறன், நல்லாட்சி, பாதுகாப்பு, கலாசார விழுமியங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்குத் தேவையான திருத்தங்களை அடையாளம் கண்டு, அது தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் பொறுப்பு இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

...

arvoshan.com

அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி: எம்பி சாணக்கியன் பிபிசிக்கு தகவல்!

...

arvoshan.com

1,540 புதிய கிராம நிலதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார் ஜனாதிபதி

...

arvoshan.com

அடுத்த 2-3 ஆண்டுகளில் VAT வரி குறைக்கப்படும்: ஜனாதிபதி அநுர அறிவிப்பு

...

arvoshan.com

சிறைப்பட்ட பௌத்த பிக்குகளுக்கான சட்டவிதிமுறைகளை மீளாய்வு செய்ய ஜனாதிபதி இரு வார கால அவகாசம்!

...

arvoshan.com

அக்குரெகொடை இரட்டைப் படுகொலை: பிரதான சந்தேகநபர் தப்பியோட உதவியவர் கைது!

...

arvoshan.com

சஷீந்திர ராஜபக்‌ஷவின் வழக்கு: ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை நிராகரித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்!

...

arvoshan.com

ஊழல் வழக்குகளில் 16 முன்னாள் அமைச்சர்கள் சிக்கியுள்ளனர்: சுனில் வட்டகல பாராளுமன்றத்தில் தகவல்

...

arvoshan.com

ஆஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை

...

arvoshan.com

2015 முதல் நிலுவையிலுள்ள 50 ஊழல் வழக்குகள்: நாடாளுமன்றத்தில் கோவை சமர்ப்பித்தார் அமைச்சர் பிமல்

...

arvoshan.com

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற விடுதிக்கு 10 லட்சம் அபராதம்!

...

arvoshan.com

விளக்கமறியலில் உள்ள ஷிராந்தி ராஜபக்ஷ நாளை தேசிய கண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தீர்மானம்

...

arvoshan.com

என்.டி.பி வங்கி நிதி மோசடி 13.6 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு: தணிக்கை அறிக்கையில் பரபரப்புத் தகவல்கள்!

...

arvoshan.com

கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை: 22 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு

...

arvoshan.com

ஞானசார தேரருக்கு சிறை ஆடை: ஐ.தே.க (UNP) கடும் எதிர்ப்பு!

...