ஞானசார தேரருக்கு சிறை ஆடை: ஐ.தே.க (UNP) கடும் எதிர்ப்பு!

arvloshan.com

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பாரம்பரிய காவி உடைக்கு பதிலாக சிறை ஆடை வழங்கப்பட்ட தீர்மானமானது, அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பௌத்த மதம் மற்றும் மத சுதந்திரத்திற்கான உரிமைகளை மீறும் செயலாகும் என ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கவலை வெளியிட்டுள்ளது.

கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளியிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 9 மற்றும் 10 ஆம் பிரிவுகளை மீறும் வகையில் அமைந்துள்ள இத்தீர்மானம், பௌத்த மதத்திற்கும் மத சுதந்திரத்திற்கும் விடப்பட்ட சவாலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பௌத்த துறவி ஒருவரின் மத ரீதியான ஆடைகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம், விநய பீடகத்தின் (Vinaya Pitaka) பிரகாரமும் உரிய பௌத்த நிகாயவுக்கே உரித்தானது என அவர் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் ஞானசார தேரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு சிறை ஆடையை அணிவிக்க தீர்மானிப்பதற்கு முன்னர், நீதி அமைச்சானது மகா நாயக்க தேரர்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்றும் அபேவர்தன குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஞானசார தேரர் சிறையிலடைக்கப்பட்டிருந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த அவர், அன்றைய காலகட்டத்தில் மகா நாயக்க தேரர்கள் அன்றைய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியதைத் தொடர்ந்தே அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

நாட்டின் சிரேஷ்ட பௌத்த மதத் தலைவர்களின் தலையீட்டுடன் முன்னர் கையாளப்பட்ட ஒரு விவகாரத்தை, தற்போதைய சூழலில் சாதாரண ஒரு சட்ட வழக்காகக் கருதி கையாள்வது பொருத்தமற்றது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இவ்விடயத்தில் உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் குறிப்பிட்ட ஐ.தே.க தவிசாளர், முன்னைய ஆட்சியில் வழங்கப்பட்ட பொதுமன்னிப்புத் தீர்மானத்தை தற்போது வேறுபட்ட முறையில் அணுகுவது எவ்வாறு என்றும் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், நாடாளுமன்றத்தின் ஆலோசனைகளைப் பெற்று, இச்சிக்கலுக்கு மாற்று வழியில் தீர்வு காண்பதற்கான வாய்ப்பு அரசாங்கத்திற்கு இருந்தது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, இந்த சர்ச்சை மற்றும் இதன் சட்ட ரீதியான தாக்கங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை திரும்பியதும் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்றும் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

சிறைச்சாலை சட்ட விதிகளை திருத்த விசேட குழு நியமனம்

...

arvoshan.com

ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

...

arvoshan.com

அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி: எம்பி சாணக்கியன் பிபிசிக்கு தகவல்!

...

arvoshan.com

1,540 புதிய கிராம நிலதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார் ஜனாதிபதி

...

arvoshan.com

அடுத்த 2-3 ஆண்டுகளில் VAT வரி குறைக்கப்படும்: ஜனாதிபதி அநுர அறிவிப்பு

...

arvoshan.com

சிறைப்பட்ட பௌத்த பிக்குகளுக்கான சட்டவிதிமுறைகளை மீளாய்வு செய்ய ஜனாதிபதி இரு வார கால அவகாசம்!

...

arvoshan.com

அக்குரெகொடை இரட்டைப் படுகொலை: பிரதான சந்தேகநபர் தப்பியோட உதவியவர் கைது!

...

arvoshan.com

சஷீந்திர ராஜபக்‌ஷவின் வழக்கு: ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை நிராகரித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்!

...

arvoshan.com

ஊழல் வழக்குகளில் 16 முன்னாள் அமைச்சர்கள் சிக்கியுள்ளனர்: சுனில் வட்டகல பாராளுமன்றத்தில் தகவல்

...

arvoshan.com

ஆஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை

...

arvoshan.com

2015 முதல் நிலுவையிலுள்ள 50 ஊழல் வழக்குகள்: நாடாளுமன்றத்தில் கோவை சமர்ப்பித்தார் அமைச்சர் பிமல்

...

arvoshan.com

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற விடுதிக்கு 10 லட்சம் அபராதம்!

...

arvoshan.com

விளக்கமறியலில் உள்ள ஷிராந்தி ராஜபக்ஷ நாளை தேசிய கண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தீர்மானம்

...

arvoshan.com

என்.டி.பி வங்கி நிதி மோசடி 13.6 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு: தணிக்கை அறிக்கையில் பரபரப்புத் தகவல்கள்!

...

arvoshan.com

கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை: 22 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு

...