ஞானசார தேரருக்கு சிறை ஆடை அணிவிக்கப்பட்டமைக்கு ஜனநாயக இணை எதிர்க்கட்சி கடும் கண்டனம்!

arvloshan.com

பௌத்த பிக்குகள் அணியும் பாரம்பரியக் காவி உடைக்குப் பதிலாக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு சிறைக் கைதிகளுக்கான ஆடை அணிவிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஜனநாயக இணை எதிர்க்கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளது. இச்செயலானது பௌத்த தர்மத்தை அவமதிக்கும் ஒரு நடவடிக்கை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனநாயக இணை எதிர்க்கட்சியின் அமைப்பாளர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் (G. L. Peiris) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பௌத்த பிக்குகளை நடத்தும் முறையானது, புத்த சாசனத்தின் தொன்மைமிக்க பாரம்பரியங்கள் மற்றும் ஒழுக்க விதிகளுக்கு அமைவாகவே அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களில் சிறைச்சாலை அதிகாரிகள் பௌத்த மத பாரம்பரியங்களை மதித்து நடப்பது அவசியமாகும். வினய பீடகத்தின் கூற்றுப்படி, ஒரு பிக்கு காவி உடையைத் தொடர்ந்து அணிவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம், அந்தப் பிக்கு உபசம்பதா பெற்ற பௌத்த பீடத்திற்கு மட்டுமே உரித்தானதாகும். வெளிப்புறத் தரப்போ அல்லது எந்தவொரு தனிநபரோ இதில் தலையிட முடியாது.

மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கு பௌத்த ஒழுக்க விதிகள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். ஞானசார தேரருக்கு சிறை ஆடை அணிவிக்கப்பட்ட முடிவானது, அதன் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் எடுக்கப்பட்ட ஒரு அவசர நடவடிக்கையாகும். இது பௌத்த மக்களிடையே பெரும் எதிர்ப்பையும் சர்ச்சையையும் தோற்றுவித்துள்ளது," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையின் அரசியலமைப்பின் 9-ஆவது சரத்தின் படி பௌத்த மதத்திற்கு முதன்மையான இடம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டிய அவர், அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள பௌத்த மதத்திற்கான அங்கீகாரத்தை அனைவரும் மதிக்க வேண்டியது கட்டாயமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவே, பௌத்த மதம் தொடர்பில் எந்தவொரு தரப்பும் இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஜனநாயக இணை எதிர்க்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

சிறைச்சாலை சட்ட விதிகளை திருத்த விசேட குழு நியமனம்

...

arvoshan.com

ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

...

arvoshan.com

அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி: எம்பி சாணக்கியன் பிபிசிக்கு தகவல்!

...

arvoshan.com

1,540 புதிய கிராம நிலதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார் ஜனாதிபதி

...

arvoshan.com

அடுத்த 2-3 ஆண்டுகளில் VAT வரி குறைக்கப்படும்: ஜனாதிபதி அநுர அறிவிப்பு

...

arvoshan.com

சிறைப்பட்ட பௌத்த பிக்குகளுக்கான சட்டவிதிமுறைகளை மீளாய்வு செய்ய ஜனாதிபதி இரு வார கால அவகாசம்!

...

arvoshan.com

அக்குரெகொடை இரட்டைப் படுகொலை: பிரதான சந்தேகநபர் தப்பியோட உதவியவர் கைது!

...

arvoshan.com

சஷீந்திர ராஜபக்‌ஷவின் வழக்கு: ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை நிராகரித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்!

...

arvoshan.com

ஊழல் வழக்குகளில் 16 முன்னாள் அமைச்சர்கள் சிக்கியுள்ளனர்: சுனில் வட்டகல பாராளுமன்றத்தில் தகவல்

...

arvoshan.com

ஆஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை

...

arvoshan.com

2015 முதல் நிலுவையிலுள்ள 50 ஊழல் வழக்குகள்: நாடாளுமன்றத்தில் கோவை சமர்ப்பித்தார் அமைச்சர் பிமல்

...

arvoshan.com

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற விடுதிக்கு 10 லட்சம் அபராதம்!

...

arvoshan.com

விளக்கமறியலில் உள்ள ஷிராந்தி ராஜபக்ஷ நாளை தேசிய கண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தீர்மானம்

...

arvoshan.com

என்.டி.பி வங்கி நிதி மோசடி 13.6 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு: தணிக்கை அறிக்கையில் பரபரப்புத் தகவல்கள்!

...

arvoshan.com

கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை: 22 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு

...