மிதிகமவில் ரயிலுடன் ஜீப் மோதி விபத்து – STF அதிகாரிகள் நால்வர் காயம்; இருவர் கவலைக்கிடம்
மாத்தறை, மிதிகம குருபேவில பகுதியில் ரயில்வே கடவையில் ஜீப் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் (STF) சேர்ந்த நான்கு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
இன்று (23) இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ரயிலுடன், STF அதிகாரிகள் பயணித்த ஜீப் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்றபோது ஜீப்பில் நான்கு அதிகாரிகள் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நான்கு அதிகாரிகளும் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.