கல்கிசை கடலில் மூழ்கி இந்தியப் பிரஜை உயிரிழப்பு
கல்கிசை கடற்கரையில் கடலில் நீராடிக் கொண்டிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
43 வயதுடைய இந்தியப் பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (22) மாலை கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது அவர் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் சிக்கியுள்ளார்.
இதனையடுத்து, கல்கிசை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அவரை மீட்டு, ஆரம்பகட்ட முதலுதவி வழங்கிய பின்னர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.