மரண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: அரச ஊடகத்தில் மீண்டும் தோன்றிய வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்!

arvloshan.com

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகப் பரவிய உறுதிப்படுத்தப்படாத தகவல்களுக்கு மத்தியில், அவர் ஆரோக்கியமாக இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் அந்நாட்டு அரச ஊடகங்களில் மீண்டும் தோன்றியுள்ளார்.

42 வயதான கிம் ஜோங் உன், தனது மகளுடன் ஆடை மற்றும் காலணி கண்காட்சியைப் பார்வையிடும் புகைப்படங்களை வடகொரியாவின் அரச செய்தித்தாளான ரோடோங் சின்முன் வெளியிட்டுள்ளது. அவர் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்காவில் வசிக்கும் வான்‌ஜுன் ஸீ என்பவர் ஆதாரமற்ற தகவலை வெளியிட்ட சில மணிநேரங்களிலேயே இந்தப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தடைசெய்யப்பட்ட சீன ஜனநாயகக் கட்சியின் தலைவராகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் வான்‌ஜுன் ஸீ, கிம் ஜோங் உன் கோமா நிலையில் பெய்ஜிங்கிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்துவிட்டதாகக் கூறியிருந்தார். எனினும், இந்தக் கூற்றுக்கு அவர் எந்தவொரு ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.

ஆதாரமற்ற தகவல்களை நிராகரிக்கும் தென்கொரிய உளவுத்துறை

வடகொரியாவின் அரசியல் தலைமை தொடர்பில் இதுபோன்ற வதந்திகள் அடிக்கடி பரவி வருகின்றன. அந்நாட்டின் நிர்வாகம் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் மிகவும் இரகசியமாகப் பேணப்படுவதால், இத்தகைய செய்திகளைச் சுயாதீனமாக உறுதிப்படுத்துவது கடினமாக உள்ளது.

இதற்கு முன்னரும் சீனத் தலைவர் ஷி ஜின்பிங் உயிரிழந்துவிட்டதாக வான்‌ஜுன் ஸீ ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கிம் ஜோங் உன் தொடர்பான அண்மைய தகவல்களை உறுதிப்படுத்தும் எந்தவொரு ஆதாரமும் தங்களிடம் இல்லை என தென்கொரிய உளவுத்துறை அதிகாரிகள், யோன்ஹாப் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

மேலும், இத்தகைய முக்கிய அரசியல் மாற்றங்கள் நிகழும்போது பொதுவாகக் காணப்படக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் அசாதாரண மாற்றங்களோ, சீன எல்லைப் பகுதிகளில் அகதிகளின் நடமாட்டத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்போ அவதானிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு விவகாரமே வதந்திகளுக்குக் காரணமா?

வடகொரியாவின் எதிர்காலத் தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற தன்மையே இத்தகைய வதந்திகள் மீண்டும் மீண்டும் எழுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிம் ஜோங் உன் தனது சுமார் 13 வயதுடைய மகளை எதிர்கால வாரிசாகத் தயார்படுத்தி வருவதாக தென்கொரிய உளவுத்துறை மதிப்பிடுகிறது. எனினும், அவரது இளம் வயதும், வடகொரியாவின் வரலாற்றில் இதுவரை ஒரு பெண் நாட்டின் தலைவராகப் பதவி வகிக்காத நிலையும், அந்நாட்டின் எதிர்கால அரசியல் தலைமைத்துவம் தொடர்பான ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளன.

இதனால், கிம் ஜோங் உன்னின் உடல்நிலை மற்றும் வாரிசு தொடர்பான விவகாரங்கள் சர்வதேச அளவில் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றன.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

அமெரிக்க தபால் சேவைக்கு 126 மில்லியன் டொலர் இழப்பு: பாகிஸ்தானில் ஒருவர் கைது!

...

arvoshan.com

சமூக வலைதளப் பதிவுக்காக 23 வயது ஈரானிய மாணவிக்குத் தூக்குத் தண்டனை!

...

arvoshan.com

தென் கொரியாவுக்கு எதிரான பிரசார ஒலிபரப்புகளை மீண்டும் ஆரம்பிக்கிறது வட கொரியா!

...

arvoshan.com

பிரான்ஸ் போராட்டங்களுக்கு குடியேறிகளே காரணம் எனக் குற்றச்சாட்டு – தீவிர வலதுசாரிகளின் அரசியல் பிரசாரம் தீவிரம்!

...

arvoshan.com

ட்ரம்பின் 5,000 டொலர் காசோலை வாக்குறுதி: குடியரசுக் கட்சி ஆதரவாளர்களிடமே சந்தேகம்!

...

arvoshan.com

மாலியில் ஐ.எஸ். ஆதரவு ஆயுதக் குழு தாக்குதல்: 48 பேர் பலி

...

arvoshan.com

அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸின் கால் அகற்றம் – திட்டமிட்ட தாக்குதல் என சந்தேகம்!

...

arvoshan.com

பெண்கள் சுகாதாரத்திற்காக புதிய பிரிவு, விசேட பணிக்குழு – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

...

arvoshan.com

தென்கொரிய எல்லையில் மீண்டும் ஒலிபெருக்கிப் பிரசாரம்; கூடுதல் ஆயுதங்களை நிலைநிறுத்த வடகொரியா மிரட்டல்!

...

arvoshan.com

கென்யாவில் பட்டினிப் போட்டு 191 பேரைக் கொன்றதாகக் குற்றச்சாட்டு – மத போதகருக்கு இன்று தீர்ப்பு!

...

arvoshan.com

சவுதி அரேபியாவில் இரு வங்கதேசப் பிரஜைகளுக்கு மரண தண்டனை – முன்கூட்டியே அறிவிக்கவில்லை என வங்கதேசம் குற்றச்சாட்டு!

...

arvoshan.com

இங்கிலாந்தில் பேருந்துகளில் அதிக சத்தத்துடன் இசை ஒலிபரப்பினால் £100 அபராதம்!

...

arvoshan.com

கருங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவின் அடுத்தகட்ட நகர்வு குறித்து நேட்டோ நாடுகள் அச்சம்!

...

arvoshan.com

ஆங்கிலக் கால்வாய் சுரங்க ரயிலுடன் மினிபஸ் மோதி விபத்து – 19 பேர் காயம்!

...

arvoshan.com

மெக்சிகோ கடற்பகுதியில் கடலில் தத்தளித்த 16 பேர் மீட்பு; பலரைத் தேடும் அமெரிக்க கடலோரக் காவல்படை

...