நீர்கொழும்பில் பிரமிட் நிதி மோசடி தொடர்பில் இருவர் கைது!
பொதுமக்களை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பிரமிட் நிதி மோசடி நடவடிக்கை தொடர்பில் இருவர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரமிட் நிதி நிறுவனமொன்றை நடத்துதல், அதனை விளம்பரப்படுத்துதல், ஊக்குவித்தல், நிதியளித்தல் மற்றும் நிர்வகித்தல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, திம்பிரிகஸ்கட்டுவ மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த 45 மற்றும் 59 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நிதி மோசடி தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.