ரத்கம பகுதியில் வெள்ளப் பாதிப்பைக் கட்டுப்படுத்த ரூ.3.38 பில்லியன் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

arvloshan.com

ரத்கம நகரில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், காணி அபிவிருத்தி மற்றும் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 3,380.22 மில்லியன் ரூபா (ரூ.3.38 பில்லியன்) செலவிலான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2027ஆம் ஆண்டு முதல் 2029ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தை இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் முன்னெடுக்கவுள்ளது.

தென் மாகாணத்தில் காலி மற்றும் ஹிக்கடுவை நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள ரத்கம நகரில் முறையான வடிகால் கட்டமைப்பு இல்லாத காரணத்தினால் அடிக்கடி வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்குத் தீர்வுகாணும் வகையில் இத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரின் முன்மொழிவுக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, ரத்கம - தொடந்துவ வீதி மற்றும் விஜேரத்ன வீதி ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ள கைவிடப்பட்ட 24.5 ஏக்கர் நெல்வயல் காணியில் சுமார் 13 ஏக்கர் நிலப்பரப்பில் நீர்த்தேக்கம் மற்றும் மழைநீரைத் தற்காலிகமாகச் சேமிக்கும் பகுதிகள் உருவாக்கப்படவுள்ளன.

அத்துடன், நீர்நிலைகளின் கரைகளை அபிவிருத்தி செய்தல், பராமரிப்புப் பணிகளுக்கான அணுகல் வீதிகளை அமைத்தல் மற்றும் கீழ்நிலைப் பகுதியில் அமைந்துள்ள சுமார் 1.5 ஏக்கர் காணியில் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் மூலம் மேலதிக மழைநீரை ரத்கம களப்புக்குத் திருப்பி விடுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படுவதுடன், ரத்கம நகரில் தொடர்ச்சியாக ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

TIN இலக்கம் இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்தல், வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தலில் தற்காலிக சலுகை!

...

arvoshan.com

ABU பொதுக்கூட்டத்துக்கு 10.4 கோடி ரூபாய் அரச நிதி: அமைச்சர் நளிந்த விளக்கம்

...

arvoshan.com

மருத்துவர்களின் கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் போராட்டம் – முக்கிய வைத்தியசாலைகளில் ஆர்ப்பாட்டம் நடத்த GMOA தீர்மானம்!

...

arvoshan.com

சம்பூர் – கப்பல்துறை மின்சார பரிமாற்றத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

...

arvoshan.com

சிறுநீரக நோயாளிகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய்களுக்கான மருந்துகள் கொள்வனவு – அமைச்சரவை அங்கீகாரம்

...

arvoshan.com

டித்வா புயலால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க ரூ. 3.3 பில்லியன் ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி!

...

arvoshan.com

இலங்கையின் நிலையான வர்த்தகத்தை மேம்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் 10 மில்லியன் யூரோ நிதியுதவி – அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

நீதித்துறையின் சுதந்திரத்திற்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து குரல் கொடுத்தவர் லால் விஜேநாயக்க – சஜித் புகழாரம்

...

arvoshan.com

வவுனியா ஏ9 வீதியின் புனரமைப்புக்கு 1.3 பில்லியன் ரூபா ஒப்பந்தம்

...

arvoshan.com

கிரிஷ் ஒப்பந்த மோசடி வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை – எனினும் தொடர்ந்து விளக்கமறியலில்

...

arvoshan.com

புதிய TIN நடைமுறை: இனி வருமான வரித் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை!

...

arvoshan.com

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிராகரிப்பு: நாடாளுமன்றத்தில் செங்கோலைக் கைப்பற்ற எதிர்க்கட்சி எம்.பிக்கள் முயற்சி

...

arvoshan.com

TIN சான்றிதழ் பெறுவதில் தொடரும் நெரிசல் – நாடளாவிய ரீதியில் வருமான வரித் திணைக்கள அலுவலகங்களில் மக்கள் அவதி

...

arvoshan.com

சிறுவர்களின் இணையப் பாதுகாப்புக்கான தேசியக் கொள்கை கட்டமைப்பை உருவாக்க இலங்கை நடவடிக்கை

...

arvoshan.com

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் விசாரணை நடத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்க முன்மொழிவு

...