TIN இலக்கம் இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்தல், வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தலில் தற்காலிக சலுகை!

arvloshan.com

வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான (TIN) இலக்கத்தை இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல் மற்றும் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல் ஆகிய இரண்டு சேவைகளிலும் அரசாங்கம் தற்காலிக சலுகையை அறிவித்துள்ளது.

எதிர்வரும் பொருளாதார நடவடிக்கைகளுக்காக நவம்பர் 1, 2026 முதல் எட்டு வகையான செயற்பாடுகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தற்காலிக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், TIN இலக்கம் இல்லாதவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம் உள்ளிட்ட அடிப்படை தனிப்பட்ட விபரங்களைச் சமர்ப்பித்து வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.

அதேபோன்று, வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கும்போது TIN சான்றிதழைச் சமர்ப்பிக்காமல், தேசிய அடையாள அட்டை விபரங்களை வழங்கி பிரதேச செயலகங்களில் குறித்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கான அறிவுறுத்தல்களை உரிய நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும், இந்தத் தற்காலிகச் சலுகையானது TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை நீக்குவதில்லை எனத் தெரிவித்த அமைச்சர், பொதுமக்கள் எவ்வித பதற்றமுமின்றி படிப்படியாகப் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 17 மில்லியன் மக்கள் உள்ள நிலையில், அவர்களில் இதுவரை 13 மில்லியன் பேருக்கு TIN இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள சுமார் 4 மில்லியன் பேர் இன்னும் பதிவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதால் ஒருவர் தானாகவே வருமான வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படாது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

13 மில்லியன் பேருக்கு TIN இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், தற்போது சுமார் 12 இலட்சம் வருமான வரிக் கோப்புகளே பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

TIN கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல் மற்றும் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல் ஆகியவற்றிலேயே அதிகளவிலான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஏனைய நடவடிக்கைகளில் இத்தகைய பாதிப்புகள் பெருமளவில் பதிவாகவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவது மற்றும் இணையவழி TIN பதிவுச் சேவையைப் பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பச் சிக்கல்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், அவற்றைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், நவம்பர் 1ஆம் திகதிக்குப் பின்னர் TIN பதிவுகளை மேற்கொள்ள முடியாது எனப் பரப்பப்படும் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பொருளாதார நடவடிக்கைகளை முறைப்படுத்துதல் மற்றும் வரி நிர்வாகத்தை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில், TIN பதிவு முறைக்குள் தகுதியான அனைவரையும் படிப்படியாக உள்வாங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு மூன்று கப்பல்களில் எரிவாயுவை இறக்குமதி செய்ய LAUGFS Gas நடவடிக்கை

...

arvoshan.com

இலங்கையில் டிஜிட்டல் சொத்துக்களைப் பணப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்த முடியாது – மத்திய வங்கி ஆளுநர்

...

arvoshan.com

சம்பளம் வழங்கப்படாமைக்கு எதிராக ‘மவ்பிம’ மற்றும் ‘சிலோன் டுடே’ ஊடகவியலாளர்கள் போராட்டம்

...

arvoshan.com

ரத்கம பகுதியில் வெள்ளப் பாதிப்பைக் கட்டுப்படுத்த ரூ.3.38 பில்லியன் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

ABU பொதுக்கூட்டத்துக்கு 10.4 கோடி ரூபாய் அரச நிதி: அமைச்சர் நளிந்த விளக்கம்

...

arvoshan.com

மருத்துவர்களின் கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் போராட்டம் – முக்கிய வைத்தியசாலைகளில் ஆர்ப்பாட்டம் நடத்த GMOA தீர்மானம்!

...

arvoshan.com

சம்பூர் – கப்பல்துறை மின்சார பரிமாற்றத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

...

arvoshan.com

சிறுநீரக நோயாளிகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய்களுக்கான மருந்துகள் கொள்வனவு – அமைச்சரவை அங்கீகாரம்

...

arvoshan.com

டித்வா புயலால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க ரூ. 3.3 பில்லியன் ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி!

...

arvoshan.com

இலங்கையின் நிலையான வர்த்தகத்தை மேம்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் 10 மில்லியன் யூரோ நிதியுதவி – அமைச்சரவை அனுமதி

...

arvoshan.com

நீதித்துறையின் சுதந்திரத்திற்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து குரல் கொடுத்தவர் லால் விஜேநாயக்க – சஜித் புகழாரம்

...

arvoshan.com

வவுனியா ஏ9 வீதியின் புனரமைப்புக்கு 1.3 பில்லியன் ரூபா ஒப்பந்தம்

...

arvoshan.com

கிரிஷ் ஒப்பந்த மோசடி வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை – எனினும் தொடர்ந்து விளக்கமறியலில்

...

arvoshan.com

புதிய TIN நடைமுறை: இனி வருமான வரித் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை!

...

arvoshan.com

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிராகரிப்பு: நாடாளுமன்றத்தில் செங்கோலைக் கைப்பற்ற எதிர்க்கட்சி எம்.பிக்கள் முயற்சி

...