கோட்டாபயவின் வெளிநாட்டுப் பயணத் தடை: நவம்பர் 4ஆம் திகதி சிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவு

arvloshan.com

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவது தொடர்பான கோரிக்கை குறித்து, எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (சிஐடி) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சையைத் தொடர்வதற்காக சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் அவரது சட்டத்தரணிகள் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இலங்கையிலுள்ள வைத்தியசாலையொன்றில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக மேலதிக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் சிங்கப்பூர் செல்ல வேண்டியுள்ளதாகவும் அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் திறந்த நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்.

எனினும், இந்த வழக்கில் முறைப்பாட்டாளரான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை.

இதனையடுத்து, வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவது தொடர்பான கோரிக்கை குறித்து தமது நிலைப்பாட்டை முன்வைப்பதற்காக, நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சிஐடிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பல முன்னாள் புலனாய்வு அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

கொழும்பில் பெறுமதியான காணி மோசடி: தொழிலதிபர் நவம்பர் 5 வரை விளக்கமறியலில்!

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறை வரவு செலவுத் திட்டம் குறித்து ஜனாதிபதி ஆய்வு!

...

arvoshan.com

யானைத் தந்தத்தின் ஒரு பகுதியை 8 இலட்சம் ரூபாவுக்கு விற்க முயற்சி – இருவர் கைது!

...

arvoshan.com

இலங்கையின் கனிமத் துறைக்கு பெரும் முதலீட்டாளர்களை ஈர்க்க ஜனாதிபதி நடவடிக்கை

...

arvoshan.com

டப்ளின் விமான நிலையத்தில் பாகுபாடு – குமார் சங்கக்காரா குற்றச்சாட்டு!

...

arvoshan.com

நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு விசாரணையில் அலி சப்ரியின் கருத்துக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கேள்வி

...

arvoshan.com

ஹோமாகம பொலிஸ் காவல் மரணம்: பொலிஸ் அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

...

arvoshan.com

வாகன இறக்குமதி வரி மோசடி குற்றச்சாட்டுடன் தொடர்பில்லை – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

...

arvoshan.com

கடவுச்சீட்டு பெறுவதற்கு இணையவழி முன்பதிவு கட்டாயம்!

...

arvoshan.com

2030ஆம் ஆண்டுக்குள் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலக்கு!

...

arvoshan.com

பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் – ஹோமாகம பொலிஸ் அதிகாரி கைது!

...

arvoshan.com

SUV வாகனம் வழங்குவதாகக் கூறி 59 இலட்சம் ரூபாய் மோசடி – கொழும்பில் ஒருவர் கைது!

...

arvoshan.com

2027 வரவு செலவுத் திட்டம்: மூலதனச் செலவினங்களுக்கு ரூ. 2 டிரில்லியன் ஒதுக்கீடு

...

arvoshan.com

ஆசிய – பசுபிக் பிராந்திய ஐ.நா. மாநாட்டின் துணைத் தலைவராக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவு!

...

arvoshan.com

பறவை மோதியதாகச் சந்தேகம் – ஸ்ரீலங்கன் விமானத்தின் புறப்பாடு இடைநிறுத்தம்!

...