2027ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறை வரவு செலவுத் திட்டம் குறித்து ஜனாதிபதி ஆய்வு!

arvloshan.com

2027ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறை அமைச்சின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மற்றும் நாட்டின் வரலாற்று மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (ஒக்டோபர் 28) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் தனித்தனி திட்டங்களின் முன்னேற்றம், அவற்றைச் செயற்படுத்தும்போது எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் அவற்றுக்கான உடனடித் தீர்வுகள் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்தார்.

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் உள்ள டச்சு காலத் துறைமுகங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள முக்கிய சுற்றுலா அபிவிருத்தித் திட்டம் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது வரலாற்று மரபுரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கடல் சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான நிதி வழிமுறைகளை உருவாக்குதல் மற்றும் சொகுசுக் கப்பல் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் துறைமுக வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

மேலும், பௌத்தக் கல்வி மற்றும் ஆன்மிகச் சுற்றுலாவை மையமாகக் கொண்டு அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளைச் சர்வதேச ரீதியில் தனித்துவமான சுற்றுலாத் தலங்களாகப் பிரபலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் தென் மாகாணம், சபரகமுவ மாகாணம் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்படும் 'Southern Mist' திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மதிப்பாய்வு செய்யப்பட்டது.

சுற்றுலாத்துறையில் தொழில்முனைவோர் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், அமைச்சினால் முன்னெடுக்கப்படும் தொழில்முனைவோர் கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களை விரிவுபடுத்துதல், சுற்றுலாத்துறை சார்ந்த தனித்துவமான பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்துதல் போன்ற முன்மொழிவுகளும் கலந்துரையாடப்பட்டன.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அவர்களுக்கு விரைவான உதவிகளை வழங்கவும் சுற்றுலாப் பொலிஸ் பிரிவை வலுப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டன.


ஏனைய செய்திகள்

arvoshan.com

கொழும்பில் பெறுமதியான காணி மோசடி: தொழிலதிபர் நவம்பர் 5 வரை விளக்கமறியலில்!

...

arvoshan.com

யானைத் தந்தத்தின் ஒரு பகுதியை 8 இலட்சம் ரூபாவுக்கு விற்க முயற்சி – இருவர் கைது!

...

arvoshan.com

இலங்கையின் கனிமத் துறைக்கு பெரும் முதலீட்டாளர்களை ஈர்க்க ஜனாதிபதி நடவடிக்கை

...

arvoshan.com

டப்ளின் விமான நிலையத்தில் பாகுபாடு – குமார் சங்கக்காரா குற்றச்சாட்டு!

...

arvoshan.com

நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு விசாரணையில் அலி சப்ரியின் கருத்துக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கேள்வி

...

arvoshan.com

ஹோமாகம பொலிஸ் காவல் மரணம்: பொலிஸ் அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

...

arvoshan.com

வாகன இறக்குமதி வரி மோசடி குற்றச்சாட்டுடன் தொடர்பில்லை – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

...

arvoshan.com

கடவுச்சீட்டு பெறுவதற்கு இணையவழி முன்பதிவு கட்டாயம்!

...

arvoshan.com

2030ஆம் ஆண்டுக்குள் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலக்கு!

...

arvoshan.com

பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் – ஹோமாகம பொலிஸ் அதிகாரி கைது!

...

arvoshan.com

SUV வாகனம் வழங்குவதாகக் கூறி 59 இலட்சம் ரூபாய் மோசடி – கொழும்பில் ஒருவர் கைது!

...

arvoshan.com

2027 வரவு செலவுத் திட்டம்: மூலதனச் செலவினங்களுக்கு ரூ. 2 டிரில்லியன் ஒதுக்கீடு

...

arvoshan.com

ஆசிய – பசுபிக் பிராந்திய ஐ.நா. மாநாட்டின் துணைத் தலைவராக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவு!

...

arvoshan.com

பறவை மோதியதாகச் சந்தேகம் – ஸ்ரீலங்கன் விமானத்தின் புறப்பாடு இடைநிறுத்தம்!

...

arvoshan.com

அர்னாப் புயலின் தாக்கம் குறைவு – பல பகுதிகளில் மழை, பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை

...