இலங்கையின் கனிமத் துறைக்கு பெரும் முதலீட்டாளர்களை ஈர்க்க ஜனாதிபதி நடவடிக்கை

arvloshan.com

இலங்கையின் கனிம வளத் துறைக்கு முன்னணி முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான திட்டங்களை இறுதிப்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் உயர்மட்டக் கூட்டமொன்று இன்று (ஒக்டோபர் 28) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

நாட்டின் இயற்கை வளங்களை முறையாக மதிப்பீடு செய்து, அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என இதன்போது வலியுறுத்திய ஜனாதிபதி, இலங்கையில் காணப்படும் கனிம வளங்களின் முழுமையான ஆற்றலை அடையாளம் கண்டு, அவற்றில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

கனிம வளத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான காணிகளை அடையாளம் காணும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள கனிமப் படிவுகளின் துல்லியமான அமைவிடங்களைக் கண்டறிவது தொடர்பிலும் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, கஹட்டகஹா கிரபைட் சுரங்கம் மற்றும் எப்பாவல பொஸ்பேட் கனிமப் படிவுகள் தொடர்பான தற்போதைய ஆய்வுப் பணிகள், அத்துடன் அவற்றில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான உத்திகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இலங்கையின் கனிம வளங்கள் மற்றும் ஆய்வுகள் தொடர்பாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தினால் வெளியிடப்படும் அறிக்கைகள் சர்வதேச தரங்களுக்கு அமைவாகத் தயாரிக்கப்படுவதை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந்த அறிக்கைகள் உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெறுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது. எதிர்காலத்தில் கனிம வள ஆய்வுப் பணிகளை நிபுணத்துவம் வாய்ந்த வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் இதன்போது பரிசீலிக்கப்பட்டன.

இதேவேளை, இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை மேம்படுத்துவது தொடர்பிலும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

இரத்தினக்கல் அகழ்வுப் பணிகள் சட்டபூர்வமாகவும் முறையான கட்டமைப்பின் கீழும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான வலுவான கொள்கைக் கட்டமைப்பொன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், இரத்தினக்கல் ஏற்றுமதியில் இடம்பெறும் மோசடிகளைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

உள்நாட்டு இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலை மேம்படுத்துவதோடு, வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்கும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரத்தினக்கல் மற்றும் ஆபரண மத்திய நிலையத்தின் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றமும் கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டது.

இலங்கையின் கனிம வளங்களை முறையாகப் பயன்படுத்தி, அவற்றின் ஊடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

கொழும்பில் பெறுமதியான காணி மோசடி: தொழிலதிபர் நவம்பர் 5 வரை விளக்கமறியலில்!

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறை வரவு செலவுத் திட்டம் குறித்து ஜனாதிபதி ஆய்வு!

...

arvoshan.com

யானைத் தந்தத்தின் ஒரு பகுதியை 8 இலட்சம் ரூபாவுக்கு விற்க முயற்சி – இருவர் கைது!

...

arvoshan.com

டப்ளின் விமான நிலையத்தில் பாகுபாடு – குமார் சங்கக்காரா குற்றச்சாட்டு!

...

arvoshan.com

நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு விசாரணையில் அலி சப்ரியின் கருத்துக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கேள்வி

...

arvoshan.com

ஹோமாகம பொலிஸ் காவல் மரணம்: பொலிஸ் அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

...

arvoshan.com

வாகன இறக்குமதி வரி மோசடி குற்றச்சாட்டுடன் தொடர்பில்லை – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

...

arvoshan.com

கடவுச்சீட்டு பெறுவதற்கு இணையவழி முன்பதிவு கட்டாயம்!

...

arvoshan.com

2030ஆம் ஆண்டுக்குள் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலக்கு!

...

arvoshan.com

பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் – ஹோமாகம பொலிஸ் அதிகாரி கைது!

...

arvoshan.com

SUV வாகனம் வழங்குவதாகக் கூறி 59 இலட்சம் ரூபாய் மோசடி – கொழும்பில் ஒருவர் கைது!

...

arvoshan.com

2027 வரவு செலவுத் திட்டம்: மூலதனச் செலவினங்களுக்கு ரூ. 2 டிரில்லியன் ஒதுக்கீடு

...

arvoshan.com

ஆசிய – பசுபிக் பிராந்திய ஐ.நா. மாநாட்டின் துணைத் தலைவராக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவு!

...

arvoshan.com

பறவை மோதியதாகச் சந்தேகம் – ஸ்ரீலங்கன் விமானத்தின் புறப்பாடு இடைநிறுத்தம்!

...

arvoshan.com

அர்னாப் புயலின் தாக்கம் குறைவு – பல பகுதிகளில் மழை, பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை

...