அர்னாப் புயலின் தாக்கம் குறைவு – பல பகுதிகளில் மழை, பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை

arvloshan.com

அர்னாப் புயல் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடந்துள்ள நிலையில், இலங்கையின் வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை இன்று (28) மாலை 4 மணிக்கு வெளியிட்டுள்ள திணைக்களம், நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

இதன்படி, மேல் மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

அதேவேளை, நாளை (29) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பலத்த காற்று வீசக்கூடும்!

இதற்கிடையில், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், அத்துடன் திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

கொழும்பில் பெறுமதியான காணி மோசடி: தொழிலதிபர் நவம்பர் 5 வரை விளக்கமறியலில்!

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறை வரவு செலவுத் திட்டம் குறித்து ஜனாதிபதி ஆய்வு!

...

arvoshan.com

யானைத் தந்தத்தின் ஒரு பகுதியை 8 இலட்சம் ரூபாவுக்கு விற்க முயற்சி – இருவர் கைது!

...

arvoshan.com

இலங்கையின் கனிமத் துறைக்கு பெரும் முதலீட்டாளர்களை ஈர்க்க ஜனாதிபதி நடவடிக்கை

...

arvoshan.com

டப்ளின் விமான நிலையத்தில் பாகுபாடு – குமார் சங்கக்காரா குற்றச்சாட்டு!

...

arvoshan.com

நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு விசாரணையில் அலி சப்ரியின் கருத்துக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கேள்வி

...

arvoshan.com

ஹோமாகம பொலிஸ் காவல் மரணம்: பொலிஸ் அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

...

arvoshan.com

வாகன இறக்குமதி வரி மோசடி குற்றச்சாட்டுடன் தொடர்பில்லை – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

...

arvoshan.com

கடவுச்சீட்டு பெறுவதற்கு இணையவழி முன்பதிவு கட்டாயம்!

...

arvoshan.com

2030ஆம் ஆண்டுக்குள் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலக்கு!

...

arvoshan.com

பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் – ஹோமாகம பொலிஸ் அதிகாரி கைது!

...

arvoshan.com

SUV வாகனம் வழங்குவதாகக் கூறி 59 இலட்சம் ரூபாய் மோசடி – கொழும்பில் ஒருவர் கைது!

...

arvoshan.com

2027 வரவு செலவுத் திட்டம்: மூலதனச் செலவினங்களுக்கு ரூ. 2 டிரில்லியன் ஒதுக்கீடு

...

arvoshan.com

ஆசிய – பசுபிக் பிராந்திய ஐ.நா. மாநாட்டின் துணைத் தலைவராக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவு!

...

arvoshan.com

பறவை மோதியதாகச் சந்தேகம் – ஸ்ரீலங்கன் விமானத்தின் புறப்பாடு இடைநிறுத்தம்!

...