13 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கை

arvloshan.com

இலங்கையின் 13 மாவட்டங்களில் இன்று (21) மாலை மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய, குறித்த மாவட்டங்களுக்கு அம்பர் (Amber) நிற எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12.03 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (22) அதிகாலை 1.00 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, நுவரெலியா, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்.

அத்துடன், காலி, கண்டி, குருநாகல், பதுளை, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மின்னல் தாக்கங்களினால் திறந்தவெளிகளில் இருப்பவர்களுக்கு கடுமையான காயங்கள் அல்லது உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும், திறந்தவெளி நடவடிக்கைகள், மின்சார விநியோகம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே குழு மோதல்: 5 பேர் காயம் – 21 பேர் விளக்கமறியலில்

...

arvoshan.com

மருத்துவர்களின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: தொழிற்சங்க நடவடிக்கைக்கு GMOA தயாராகிறது

...

arvoshan.com

இம்ரான் கான் தொடர்பான விவாதத்தைத் தடுத்தமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி

...

arvoshan.com

2027 ஜனவரியில் அரச ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மூன்றாம் கட்ட சம்பள அதிகரிப்பு – பிரதமர் அறிவிப்பு

...

arvoshan.com

இந்தியப் பெருங்கடலில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!

...

arvoshan.com

2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படவில்லை – பிரதமர் ஹரிணி

...

arvoshan.com

வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த 70-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் – அமைச்சர்

...

arvoshan.com

“சிறிமாவோவுக்கு ஜே.ஆர் செய்ததை மீண்டும் செய்ய வேண்டாம்” – அரசாங்கத்துக்கு தயாசிறி எச்சரிக்கை

...

arvoshan.com

நிந்தவூரில் கடலில் மூழ்கி இரு இளைஞர்கள் மாயம் – ஒருவர் மீட்பு

...

arvoshan.com

இலங்கையின் 7 பகுதிகளில் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு காற்றின் தரம் வீழ்ச்சி

...

arvoshan.com

பன்னிப்பிட்டியவில் பழைய இரும்புப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

...

arvoshan.com

4 பில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டு: இரு நிறுவனப் பணிப்பாளர்கள் கைது

...

arvoshan.com

கற்பிட்டியில் 460 கிலோ கிராம் கடத்தல் கேந்து இலைகள் கடற்படையினரால் மீட்பு!

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று ஆரம்பம்

...

arvoshan.com

இலங்கையில் பரிசோதிக்கப்பட்ட 16 பூந்தி மாதிரிகளில் 13இல் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்!

...