நிந்தவூரில் கடலில் மூழ்கி இரு இளைஞர்கள் மாயம் – ஒருவர் மீட்பு
நிந்தவூர் கடற்பரப்பில் கடலில் குளித்துக்கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியதில் இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, நீரில் மூழ்கிய மூவரில் ஒருவரை அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
காணாமல் போனவர்கள் 16 மற்றும் 23 வயதுடைய நிந்தவூரைச் சேர்ந்த இளைஞர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன இருவரையும் தேடும் பணியில் கடற்படை சுழியோடிகள், பிரதேச மக்கள் மற்றும் நிந்தவூர் பொலிஸார் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.