கற்பிட்டியில் 460 கிலோ கிராம் கடத்தல் கேந்து இலைகள் கடற்படையினரால் மீட்பு!
இலங்கைக்குக் கடத்தி வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 460 கிலோ கிராம் கேந்து இலைகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த நவம்பர் 20ஆம் திகதி கற்பிட்டி, கப்பலாடி மற்றும் சின்னமுக்கரை கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின்போதே இந்த இலைகள் மீட்கப்பட்டுள்ளன.
வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் SLNS விஜய கப்பலைச் சேர்ந்த கடற்படையினர் மேற்கொண்ட சோதனையின்போது, கடற்கரையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 12 சந்தேகத்திற்கிடமான பொதிகளில் இருந்து இந்த கேந்து இலைகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடத்தல்காரர்கள் இந்தப் பொருட்களைக் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.
மீட்கப்பட்ட கேந்து இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.