ரஷ்யாவில் தொடரும் கரடித் தாக்குதல்கள்: ஒரே மாதத்தில் 7 பேர் பலி!

arvloshan.com

ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தில், தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் நின்றிருந்த பெண் ஒருவர் கரடி தாக்கி பரிதாபமாக உயிரிழத்துள்ளார். இச்சம்பவத்துடன், அம்மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்குள் கரடித் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதிலும் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் இத்தகைய கரடித் தாக்குதல்களுக்கு, பருவநிலை மாற்றம் மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே முக்கிய காரணங்கள் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தலைநகர் மாஸ்கோவிற்கு (Moscow) கிழக்கே சுமார் 3,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராஸ்நோயார்ஸ்க்  பிராந்தியத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வோஸ்னேசென்கா (Voznesenka) கிராமத்தைச் சேர்ந்த 51 வயதான பெண்மணி, தனது வீட்டுத் தோட்டத்தில் வளர்ப்புப் பிராணிகள் இருந்த கூண்டிற்குள் நுழைய முயன்ற பழுப்புக் கரடியைத் த தடுக்க முற்பட்டபோதே, அக்கரடி திடீரெனப் பாய்ந்து அவரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. இதனை அவதானித்த அப்பகுதியைச் சேர்ந்த அண்டை வீட்டாரொருவர் அக்கரடியைச் சுட்டுக்கொன்றுள்ளார்.

வருடத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலி

ரஷ்யா முழுவதிலும் உள்ள சுமார் 11 பிராந்தியங்களில் இந்த ஆண்டில் மட்டும் கரடிகள் மனிதர்களைத் தாக்கியுள்ளதில், இதுவரை குறைந்தபட்சம் 20 பேர் வரை உயிரிழத்துள்ளனர். வழக்கமாகச் செப்டம்பர் மாதங்களில் கரடிகளுக்குக் கிடைக்கக்கூடிய காட்டுப் பழங்கள் , இம்முறை வசந்த காலத்தின் தொடக்கத்திலேயே வறட்சி ஏற்பட்டமையினால் கிடைக்கப்பெறவில்லை. இதனால் உணவைத் தேடி கரடிகள் மனிதக் குடியிருப்புகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், பொதுமக்கள் உணவுக் கழிவுகளைத் திறந்தவெளியில் வீசுவதும், பாதுகாப்பு விதிமுறைகளைப் புறக்கணிப்பதும் கரடிகளைக் குடியிருப்புகளை நோக்கி ஈர்ப்பதற்கு மற்றொரு காரணியாக அமைவதோடு, கரடிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கடந்த 1990 ஆம் ஆண்டில் 130,000 ஆக இருந்த கரடிகளின் எண்ணிக்கை, குளிர்காலம் குறுகியதாகவும் மிதவெப்பமாகவும் மாறியதன் விளைவாக தற்போது இருமடங்கிற்கும் அதிகமாகப் பெருகியுள்ளது.

அதிகாரிகளுக்கு எதிராகக் குற்றவியல் வழக்கு

ரஷ்யாவில் உள்ள மொத்த பழுப்புக் கரடிகளில் சுமார் 27,000 கரடிகள் கிராஸ்நோயார்ஸ்க் பிராந்தியத்திலேயே வாழ்கின்றன. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 7 பேர் உயிரிழக்கக் காரணமான அலட்சியப் போக்கிற்காக, அப்பாந்தியச் சுற்றுச்சூழல் அமைச்சு மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு எதிராக ரஷ்யக் குற்றவியல் புலனாய்வுப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.

அரசாங்கப் பதிவுகளின்படி, கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் கரடிகளின் எண்ணிக்கை 2.5 மடங்காக அதிகரித்துள்ளதுடன், சுமார் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மற்றும் முக்கிய நகரங்களின் எல்லைகளுக்குள் கரடிகள் புகுந்துள்ளதாக 120க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

நிலைமை தீவிரமடைந்துள்ளதால், பொதுமக்கள் காடுகளுக்குச் செல்வதையோ அல்லது காளான் மற்றும் பழங்கள் சேகரிக்கக் காட்டுப் பகுதிகளுக்குப் பயணிப்பதையோ தவிர்க்குமாறு புலனாய்வு அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். "ஒரு பெரிய விலங்கை நீங்கள் எதிர்கொண்டால், அதனிடமிருந்து தப்பி பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு" என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தொடரும் சோகங்கள்

கடந்த சில வாரங்களில் மட்டும் காளான் சேகரிக்கச் சென்ற பெண்கள், மரக்கட்டை வெட்டுபவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எனப் பல தரப்பினரும் இவ்வாறான தாக்குதல்களில் பலியாகியுள்ளனர். அல்டாய் பிராந்தியத்தில் கூடாரமிட்டுத் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது கரடி நடத்திய தாக்குதலில் 29 வயது பெண் ஒருவர் இழுத்துச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டார். அத்துடன், பிரபல பனிஹாக்கி பயிற்றுவிப்பாளர் அலெக்ஸாண்டர் குஸ்மென்கோ என்பவரும் அண்மையில் மீன்பிடிக்கச் சென்றவேளையில் கரடித் தாக்குதலில் உயிரிழந்தார்.

இருப்பினும், இச்சம்பவங்கள் குறித்து விளக்கமளித்துள்ள ரஷ்யச் சுற்றுச்சூழல் அமைச்சு, நிலைமை கட்டுப்பாட்டில்தான் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. "கடந்த காலங்களிலும் ஆண்டுதோறும் சராசரியாக 20 முதல் 30 கரடித் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. 2014 ஆம் ஆண்டில் மாத்திரமே 166 சம்பவங்கள் பதிவாகின. தற்போது ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், இச்செய்திகள் பரவலாகச் சென்றடைந்து ஒருவித அச்ச நிலையை தோற்றுவித்துள்ளன" என அமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில் சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம்: கட்டிடம் தரைமட்டம்; இருவர் காயம்

...

arvoshan.com

நெதன்யாகுவின் ஆவேச உரை: ஐ.நா.வில் வெளிநடப்பு!

...

arvoshan.com

போருக்குத் தங்குதடையற்ற விநியோகம், உணவுக்குத் தடை: ஐ.நா.வில் நேபாளப் பிரதமர் சாடல்!

...

arvoshan.com

CNN உள்ளிட்ட மூன்று ஊடகங்களுக்கான தடையை நீக்க வெள்ளை மாளிகைக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

...

arvoshan.com

அமெரிக்க-சீன உச்சிமாநாடு: ஷி ஜின்பிங்கை விமான நிலையம் சென்று வரவேற்றார் ட்ரம்ப்

...

arvoshan.com

தென் ஆபிரிக்காவில் விருந்தில் கொடூரத் துப்பாக்கிச் சூடு: கர்ப்பிணிப் பெண் உட்பட 11 பேர் பலி!

...

arvoshan.com

ஐ.நா.வில் அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

...

arvoshan.com

இந்தோனேசியக் காட்டுத்தீ: 1.75 இலட்சம் பேர் நச்சுப் புகையால் பாதிப்பு!

...

arvoshan.com

கனடாவில் விமான விபத்து: தமிழ்நாட்டு மாணவர்கள் இருவர் பலி

...

arvoshan.com

சவூதி அரேபியாவில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை: மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்!

...

arvoshan.com

CNN உள்ளிட்ட 3 முன்னணி ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகையில் தடை: டொனால்ட் டிரம்ப் அதிரடி!

...

arvoshan.com

கிரீன்லாந்தின் பாதுகாப்பு கட்டுப்பாடு அமெரிக்காவிடம்: ட்ரம்ப் அறிவிப்பு!

...

arvoshan.com

ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது ஈரான் தாக்குதல்: மத்திய கிழக்கில் தீவிரமடையும் பதற்றம்

...

arvoshan.com

ஆசியாவின் முதன்மைப் பணக்காரரானார் டிக்டொக் நிறுவனர் ஜாங் யிமிங்!

...

arvoshan.com

இந்தோனேசியாவில் கவிழ்ந்த படகில் இருந்து 3 சடலங்கள் மீட்பு: மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தல்

...