கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில் சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம்: கட்டிடம் தரைமட்டம்; இருவர் காயம்

arvloshan.com

கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில் அமைந்துள்ள புகழ்பெற்ற அக்ரோபோலிஸ் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிக்கு அருகே வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவத்தில், இரண்டு மாடி கட்டிடம் ஒன்று முற்றாக இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது. இச்சம்பவத்தில் குறைந்தது இருவர் காயமடைந்துள்ளதுடன், கட்டிடக் இடிபாடுகளுக்குள் எவரேனும் சிக்கியுள்ளனரா என மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அக்ரோபோலிஸ் குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ள பிளாக்கா எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாப் பகுதியிலேயே இப் பயங்கர வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமையல் எரிவாயு கசிவு காரணமாகவே இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் சந்தேகிக்கின்றன. இருப்பினும், வெடிப்புக்கான துல்லியமான காரணம் குறித்து அதிகாரிகள் உடனடியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

வெடிப்பு நிகழ்ந்த கட்டிடம் முழுமையாக இடிந்து வீழ்ந்ததில், அதற்கு அருகிலிருந்த பல கட்டிடங்களும், வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் கடுமையாக சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், அருகிலிருந்த கட்டிடத்தில் சிக்கியிருந்த இரண்டு பெண்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும், வீதியால் செல்பவர் ஒருவரும் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இடிபாடுகளுக்குள் மனிதர்கள் யாரேனும் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மோப்ப நாய்களின் உதவியுடன் மீட்புப் படையினர் சீரமைப்பு மற்றும் தேடுதல் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் குறித்து அப்பகுதிவாசி ஒருவர் தெரிவிக்கையில், இடிந்து விழுந்த கட்டிடத்தின் மேல் மாடியில் வயதான தம்பதியினர் வசித்து வந்ததாகவும், மேலும் ஒரு பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தற்காலிக தங்குமிடங்கள் இயங்கி வந்ததாகவும் குறிப்பிட்டார். அருகில் உள்ள தேவாலயம் ஒன்றின் ஜன்னல்கள் அனைத்தும் வெடிப்பின் அதிர்வால் நொறுங்கியுள்ளதால், வரவிருக்கும் ஞாயிற்றுக்கிழமை வழிபாடுகள் திறந்தவெளியில் நடைபெறும் என அத்தேவாலயத்தின் போதகர் தெரிவித்துள்ளார்.

சம்பவப் பகுதியை பொலிஸார் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளடன், மேலதிக விசாரணைகளையும் மீட்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

ரஷ்யாவில் தொடரும் கரடித் தாக்குதல்கள்: ஒரே மாதத்தில் 7 பேர் பலி!

...

arvoshan.com

நெதன்யாகுவின் ஆவேச உரை: ஐ.நா.வில் வெளிநடப்பு!

...

arvoshan.com

போருக்குத் தங்குதடையற்ற விநியோகம், உணவுக்குத் தடை: ஐ.நா.வில் நேபாளப் பிரதமர் சாடல்!

...

arvoshan.com

CNN உள்ளிட்ட மூன்று ஊடகங்களுக்கான தடையை நீக்க வெள்ளை மாளிகைக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

...

arvoshan.com

அமெரிக்க-சீன உச்சிமாநாடு: ஷி ஜின்பிங்கை விமான நிலையம் சென்று வரவேற்றார் ட்ரம்ப்

...

arvoshan.com

தென் ஆபிரிக்காவில் விருந்தில் கொடூரத் துப்பாக்கிச் சூடு: கர்ப்பிணிப் பெண் உட்பட 11 பேர் பலி!

...

arvoshan.com

ஐ.நா.வில் அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

...

arvoshan.com

இந்தோனேசியக் காட்டுத்தீ: 1.75 இலட்சம் பேர் நச்சுப் புகையால் பாதிப்பு!

...

arvoshan.com

கனடாவில் விமான விபத்து: தமிழ்நாட்டு மாணவர்கள் இருவர் பலி

...

arvoshan.com

சவூதி அரேபியாவில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை: மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்!

...

arvoshan.com

CNN உள்ளிட்ட 3 முன்னணி ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகையில் தடை: டொனால்ட் டிரம்ப் அதிரடி!

...

arvoshan.com

கிரீன்லாந்தின் பாதுகாப்பு கட்டுப்பாடு அமெரிக்காவிடம்: ட்ரம்ப் அறிவிப்பு!

...

arvoshan.com

ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது ஈரான் தாக்குதல்: மத்திய கிழக்கில் தீவிரமடையும் பதற்றம்

...

arvoshan.com

ஆசியாவின் முதன்மைப் பணக்காரரானார் டிக்டொக் நிறுவனர் ஜாங் யிமிங்!

...

arvoshan.com

இந்தோனேசியாவில் கவிழ்ந்த படகில் இருந்து 3 சடலங்கள் மீட்பு: மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தல்

...