நெதன்யாகுவின் ஆவேச உரை: ஐ.நா.வில் வெளிநடப்பு!

arvloshan.com

ஐக்கிய நாடுகள் சபை (UN) பொதுச்சபையின் உயர்மட்டக் கூட்டத் தொடரில் உரையாற்றிய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸா , ஈரான் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனது நாடு மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரமாக நியாயப்படுத்தி உரையாற்றியுள்ளார்.

நெதன்யாகு உரையாற்றுவதற்காக மேடையேறியதும், பல நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டரங்கை விட்டு வெளிநடப்பு செய்தனர். இதைக் கண்டு ஆத்திரமடைந்த நெதன்யாகு, "நாங்கள் வெற்றி பெறுவோம், அதைத் தவிர வேறு வழியில்லை. இந்த அரங்கில் இருக்கும் எஞ்சிய நேர்மையற்ற கோழைகளும் விருப்பமிருந்தால் வெளியேறலாம்" என ஆவேசமாகத் தெரிவித்தார்.

காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்த அவர், தற்காப்புக்காகவே தாம் போரிடுவதாகக் குறிப்பிட்டார். அதேவேளை, இஸ்ரேல் மீது காலனித்துவக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளை இலக்குவைத்து, "காலனித்துவம் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தவர்களே அவர்கள் தான்" என விமர்சித்தார்.

மேலும், துருக்கி ஜனாதிபதி ரசெப் தாயிப் எர்டோகனை 'சர்வாதிகாரி' எனச் சாடியதுடன், அவர் ஹமாஸ் (Hamas) அமைப்பிற்கு ஆதரவளிப்பதாகவும் குற்றம் சாட்டினார். நியூயோர்க் மேயர் சோஹ்ரான் மம்தானியைக் கடுமையாக விமர்சித்த நெதன்யாகு, அவர் பதவியேற்றது முதல் நியூயோர்க் நகரில் யூதர்களுக்கான பாதுகாப்பு உணர்வு குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அதேநேரம், கடந்த பெப்ரவரி மாதம் ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட கூட்டு வான்வழித் தாக்குதல்களுக்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் "துணிச்சலான தலைமைத்துவத்திற்கு" நெதன்யாகு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

பாலஸ்தீன ஜனாதிபதியின் குற்றச்சாட்டு:

நெதன்யாகுவின் உரைக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, காணொளி (Video) மூலம் உரையாற்றிய பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், மேற்குக்கரையில் (West Bank) இஸ்ரேலியக் குடியிருப்புகளின் சட்டவிரோத விரிவாக்கம் பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரத்தையும், இரு-நாடு தீர்வையும் (Two-state solution) முற்றாக அழித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். அத்துடன், காஸாவில் பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல்கள், அழிவுகள் மற்றும் பட்டினிப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அவருக்கு அமெரிக்க நுழைவு இசைவு (Visa) மறுக்கப்பட்ட நிலையிலேயே காணொளி வழியாக உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூயோர்க்கில் பாரிய போராட்டம் - பிரபல நடிகை கைது:

நெதன்யாகுவின் ஐ.நா. வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நியூயோர்க் நகரில் வீதிகளை மறித்துப் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இப்போராட்டத்தில் பங்கேற்ற ஒஸ்கார் (Oscar) விருது பெற்ற பிரபல ஹொலிவூட் நடிகை சூசன் சரண்டன், நடிகை ஹனா என்பிண்டர் மற்றும் நியூயோர்க் நகர சபை உறுப்பினர்கள் உட்படப் பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அடுத்த மாதம் இஸ்ரேலில் முக்கிய பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்நாட்டு வாக்குகளை ஈர்க்கவும் சர்வதேச ரீதியில் ஆதரவைத் திரட்டவுமே நெதன்யாகு இத்தகைய காரசாரமான உரையை ஆற்றியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

ரஷ்யாவில் தொடரும் கரடித் தாக்குதல்கள்: ஒரே மாதத்தில் 7 பேர் பலி!

...

arvoshan.com

கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில் சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம்: கட்டிடம் தரைமட்டம்; இருவர் காயம்

...

arvoshan.com

போருக்குத் தங்குதடையற்ற விநியோகம், உணவுக்குத் தடை: ஐ.நா.வில் நேபாளப் பிரதமர் சாடல்!

...

arvoshan.com

CNN உள்ளிட்ட மூன்று ஊடகங்களுக்கான தடையை நீக்க வெள்ளை மாளிகைக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

...

arvoshan.com

அமெரிக்க-சீன உச்சிமாநாடு: ஷி ஜின்பிங்கை விமான நிலையம் சென்று வரவேற்றார் ட்ரம்ப்

...

arvoshan.com

தென் ஆபிரிக்காவில் விருந்தில் கொடூரத் துப்பாக்கிச் சூடு: கர்ப்பிணிப் பெண் உட்பட 11 பேர் பலி!

...

arvoshan.com

ஐ.நா.வில் அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

...

arvoshan.com

இந்தோனேசியக் காட்டுத்தீ: 1.75 இலட்சம் பேர் நச்சுப் புகையால் பாதிப்பு!

...

arvoshan.com

கனடாவில் விமான விபத்து: தமிழ்நாட்டு மாணவர்கள் இருவர் பலி

...

arvoshan.com

சவூதி அரேபியாவில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை: மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்!

...

arvoshan.com

CNN உள்ளிட்ட 3 முன்னணி ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகையில் தடை: டொனால்ட் டிரம்ப் அதிரடி!

...

arvoshan.com

கிரீன்லாந்தின் பாதுகாப்பு கட்டுப்பாடு அமெரிக்காவிடம்: ட்ரம்ப் அறிவிப்பு!

...

arvoshan.com

ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது ஈரான் தாக்குதல்: மத்திய கிழக்கில் தீவிரமடையும் பதற்றம்

...

arvoshan.com

ஆசியாவின் முதன்மைப் பணக்காரரானார் டிக்டொக் நிறுவனர் ஜாங் யிமிங்!

...

arvoshan.com

இந்தோனேசியாவில் கவிழ்ந்த படகில் இருந்து 3 சடலங்கள் மீட்பு: மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தல்

...