நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு தலா 50 இலட்சம் ரூபா இழப்பீடு!

arvloshan.com

நீர்கொழும்பு சிறைச்சாலையில் 2026 ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது உயிரிழந்த மற்றும் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு விசேட இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, மோதல்களில் உயிரிழந்த ஒவ்வொரு சிறைச்சாலை அதிகாரிக்கும் தலா 50 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளது. நிரந்தர ஊனமுற்ற அதிகாரிகளுக்கும் தலா 50 இலட்சம் ரூபா வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பகுதியளவிலான ஊனமுற்றதன் காரணமாக 100 சதவீத வருமான ஈட்டும் திறனை இழந்த அதிகாரிகளுக்கு 40 இலட்சம் ரூபாவும், தற்காலிக பகுதியளவிலான ஊனமுற்ற அதிகாரிகளுக்கு 30 இலட்சம் ரூபாவும் இழப்பீடாக வழங்கப்படவுள்ளது.

இந்த இழப்பீட்டுத் தொகைகள், பொது நிர்வாகச் சுற்றறிக்கை இலக்கம் 22/93இன் கீழ் வழங்கப்படும் இழப்பீட்டுக்கு மேலதிகமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் தலைமையில், 2026 ஆகஸ்ட் 3ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மோதல்களின்போது தமது கடமைகளை நிறைவேற்றிய வேளையில் பாதிக்கப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடுகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதே இந்தக் குழுவின் பணியாக இருந்தது.

சிறைச்சாலை தந்திரோபாயப் படையை வலுப்படுத்தவும் நடவடிக்கை

இதற்கிடையில், சிறைச்சாலை தந்திரோபாயப் படையை (Prison Tactical Force) மேலும் வலுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, குறித்த படைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கும் வகையில் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேவையான எண்ணிக்கையில் தகுதியான அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்தல், அவர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்குதல், நவீன உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் பொருத்தமான இடத்தில் குறித்த படைக்கெனத் தனியான தலைமையகத்தை அமைத்தல் ஆகிய நடவடிக்கைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட இந்தப் பிரேரணைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

கொழும்பில் பெறுமதியான காணி மோசடி: தொழிலதிபர் நவம்பர் 5 வரை விளக்கமறியலில்!

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத்துறை வரவு செலவுத் திட்டம் குறித்து ஜனாதிபதி ஆய்வு!

...

arvoshan.com

யானைத் தந்தத்தின் ஒரு பகுதியை 8 இலட்சம் ரூபாவுக்கு விற்க முயற்சி – இருவர் கைது!

...

arvoshan.com

இலங்கையின் கனிமத் துறைக்கு பெரும் முதலீட்டாளர்களை ஈர்க்க ஜனாதிபதி நடவடிக்கை

...

arvoshan.com

டப்ளின் விமான நிலையத்தில் பாகுபாடு – குமார் சங்கக்காரா குற்றச்சாட்டு!

...

arvoshan.com

நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு விசாரணையில் அலி சப்ரியின் கருத்துக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கேள்வி

...

arvoshan.com

ஹோமாகம பொலிஸ் காவல் மரணம்: பொலிஸ் அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

...

arvoshan.com

வாகன இறக்குமதி வரி மோசடி குற்றச்சாட்டுடன் தொடர்பில்லை – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

...

arvoshan.com

கடவுச்சீட்டு பெறுவதற்கு இணையவழி முன்பதிவு கட்டாயம்!

...

arvoshan.com

2030ஆம் ஆண்டுக்குள் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலக்கு!

...

arvoshan.com

பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் – ஹோமாகம பொலிஸ் அதிகாரி கைது!

...

arvoshan.com

SUV வாகனம் வழங்குவதாகக் கூறி 59 இலட்சம் ரூபாய் மோசடி – கொழும்பில் ஒருவர் கைது!

...

arvoshan.com

2027 வரவு செலவுத் திட்டம்: மூலதனச் செலவினங்களுக்கு ரூ. 2 டிரில்லியன் ஒதுக்கீடு

...

arvoshan.com

ஆசிய – பசுபிக் பிராந்திய ஐ.நா. மாநாட்டின் துணைத் தலைவராக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவு!

...

arvoshan.com

பறவை மோதியதாகச் சந்தேகம் – ஸ்ரீலங்கன் விமானத்தின் புறப்பாடு இடைநிறுத்தம்!

...