மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்கக் கோரும் கோட்டாபய!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரி, தமக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால், தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டைத் தற்காலிகமாகத் தளர்த்தி, வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கை தொடர்பில் நீதிமன்றம் எத்தகைய தீர்மானத்தை எடுக்கவுள்ளது என்பது குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.