கொழும்பு கோட்டை பகுதியில் சட்டவிரோத மின்னணுச் சிகரெட்டுகள் 30 கைப்பற்றல் – ஒருவர் கைது!
கொழும்பு கோட்டை பகுதியில் சுங்கத் திணைக்களத் தலைமையகத்திற்கு எதிரே சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட 30 வெளிநாட்டு மின்னணுச் சிகரெட்டுகளை இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவம் கடந்த 2026 ஒக்டோபர் 15ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் செயற்படும் இலங்கை கடற்படையின் SLNS Rangala பிரிவினர், மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின்போதே இந்தக் கைப்பற்றல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரைச் சோதனையிட்ட அதிகாரிகள், சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட 30 மின்னணுச் சிகரெட்டுகளைக் கைப்பற்றியதுடன், குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் யட்டியாந்தோட்டைப் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட மின்னணுச் சிகரெட்டுகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.