இந்தியாவின் ரூ.1.72 பில்லியன் நிதியுதவியில் இலங்கைக்கு மேலும் 100 அம்புலன்ஸ்கள்!

arvloshan.com

இலங்கையின் 1990 சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரூ.1.72 பில்லியன் பெறுமதியான நிதியுதவியின் கீழ் முழுமையான மருத்துவ உபகரணங்களுடன் கூடிய மேலும் 100 அம்புலன்ஸ்களை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், கொழும்பில் நேற்று (11) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க ஆகியோருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டது.

கொழும்பில் நடைபெற்ற முதலாவது பிம்ஸ்டெக் (BIMSTEC) சுகாதார அமைச்சர்கள் மாநாட்டின் போது, இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் இலங்கை சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இலங்கைத் தலைமையின் வேண்டுகோளுக்கு அமைய இந்த உதவி வழங்கப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சுவசெரிய அம்புலன்ஸ் சேவையின் வாகனத் தொகையை அதிகரிப்பதுடன், அவசர மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான பதிலளிப்பு நேரத்தை 10 நிமிடங்களுக்கும் குறைவாகக் கொண்டுவருவதும் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவை, இந்தியாவின் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையின் மேல் மற்றும் தென் மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் ஆரம்பக் கட்டத்தில் 88 அம்புலன்ஸ்கள், ஒரு வருடத்துக்கான செயற்பாட்டுச் செலவுகள் மற்றும் அவசர அழைப்புகளுக்குப் பதிலளிக்கும் மையம் ஆகியவை உள்ளடக்கப்பட்டிருந்தன.

பின்னர், 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அப்போதைய இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரால் இந்தச் சேவை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்பட்டது.

இதற்காக இந்தியா மேலதிகமாக 15.02 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியிருந்தது. இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் 209 அம்புலன்ஸ்கள், அவற்றுக்கான செயற்பாட்டுச் செலவுகள் மற்றும் பயிற்சிச் செலவுகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான அபிவிருத்தி ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகவே இந்தப் புதிய நிதியுதவி வழங்கப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னரும் டிக்கோயா வைத்தியசாலையை நிர்மாணித்தல், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி, வவுனியா வைத்தியசாலைகளின் வசதிகளை மேம்படுத்துதல், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சத்திரசிகிச்சைப் பிரிவை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரத் திட்டங்களுக்கு இந்தியா ஆதரவளித்துள்ளது.

மேலும், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை மேம்படுத்துதல், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் மருத்துவ விடுதித் தொகுதியை அமைத்தல் மற்றும் தெனியாய ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


ஏனைய செய்திகள்

arvoshan.com

யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே குழு மோதல்: 5 பேர் காயம் – 21 பேர் விளக்கமறியலில்

...

arvoshan.com

மருத்துவர்களின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: தொழிற்சங்க நடவடிக்கைக்கு GMOA தயாராகிறது

...

arvoshan.com

இம்ரான் கான் தொடர்பான விவாதத்தைத் தடுத்தமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி

...

arvoshan.com

2027 ஜனவரியில் அரச ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மூன்றாம் கட்ட சம்பள அதிகரிப்பு – பிரதமர் அறிவிப்பு

...

arvoshan.com

இந்தியப் பெருங்கடலில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!

...

arvoshan.com

2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படவில்லை – பிரதமர் ஹரிணி

...

arvoshan.com

வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த 70-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் – அமைச்சர்

...

arvoshan.com

“சிறிமாவோவுக்கு ஜே.ஆர் செய்ததை மீண்டும் செய்ய வேண்டாம்” – அரசாங்கத்துக்கு தயாசிறி எச்சரிக்கை

...

arvoshan.com

13 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கை

...

arvoshan.com

நிந்தவூரில் கடலில் மூழ்கி இரு இளைஞர்கள் மாயம் – ஒருவர் மீட்பு

...

arvoshan.com

இலங்கையின் 7 பகுதிகளில் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு காற்றின் தரம் வீழ்ச்சி

...

arvoshan.com

பன்னிப்பிட்டியவில் பழைய இரும்புப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

...

arvoshan.com

4 பில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டு: இரு நிறுவனப் பணிப்பாளர்கள் கைது

...

arvoshan.com

கற்பிட்டியில் 460 கிலோ கிராம் கடத்தல் கேந்து இலைகள் கடற்படையினரால் மீட்பு!

...

arvoshan.com

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று ஆரம்பம்

...