இந்தியாவின் உட்கட்டமைப்புத் துறை உற்பத்தி 10.9% அதிகரிப்பு – புதிய சாதனை வளர்ச்சி பதிவு

arvloshan.com

இந்தியாவின் உட்கட்டமைப்புத் துறை உற்பத்தி கடந்த ஒக்டோபர் மாதத்தில் 10.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட தரவுத் தொடரின் அடிப்படையில், இதுவரை பதிவான அதிகபட்ச வளர்ச்சியாக இது அமைந்துள்ளது.

நிலக்கரி உற்பத்தி, மின்சார உற்பத்தி, இரும்புத் தாது உற்பத்தி மற்றும் சீமெந்து உற்பத்தி ஆகிய துறைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதத்தில் 8.2 சதவீதமாகப் பதிவான வளர்ச்சி, ஒக்டோபர் மாதத்தில் 10.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் கைத்தொழில் உற்பத்தியில் சுமார் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள ஒன்பது முக்கிய உட்கட்டமைப்புத் துறைகளை உள்ளடக்கிய குறியீட்டின் அடிப்படையில் இந்த வளர்ச்சி கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 2022–23ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு இந்தத் தரவுத் தொடர் திருத்தியமைக்கப்பட்டது.

ஒக்டோபர் மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 23.1 சதவீதத்தாலும், மின்சார உற்பத்தி 21.6 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன. அதேவேளை, இரும்புத் தாது உற்பத்தி 26.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

சீமெந்து உற்பத்தி செப்டெம்பர் மாதத்தில் பதிவான 10.1 சதவீத வளர்ச்சியிலிருந்து ஒக்டோபரில் 15.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. உருக்கு உற்பத்தியும் முந்தைய மாதத்தின் 5.6 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்புப் பொருட்களின் உற்பத்தி 3.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள போதிலும், செப்டெம்பர் மாதத்தில் காணப்பட்ட 8.7 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் அது வீழ்ச்சியடைந்துள்ளது.

எனினும், சில துறைகளில் உற்பத்தி வீழ்ச்சியும் தொடர்கிறது. கச்சா எண்ணெய் உற்பத்தி 4.1 சதவீதத்தாலும், இயற்கை எரிவாயு உற்பத்தி 7.6 சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளன. உர உற்பத்தியும் 12.2 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதேவேளை, 2026ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஒக்டோபர் வரையான ஏழு மாத காலப்பகுதியில் இந்தியாவின் உட்கட்டமைப்புத் துறை உற்பத்தி 6 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்த வளர்ச்சி 2.3 சதவீதமாக மாத்திரமே காணப்பட்டது.

இந்தப் புள்ளிவிபரங்கள் இந்தியாவின் எரிசக்தி, சுரங்கத் தொழில் மற்றும் கட்டுமானப் பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட முக்கிய கைத்தொழில் துறைகளில் வலுவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை எடுத்துக்காட்டுகின்றன.


ஏனைய செய்திகள்

arvoshan.com

“கடனை அடைக்கவும், மீனாட்சிக்கு உதவவும் பணம் இல்லை” – நகைக் கொள்ளை வழக்கில் நிஷாந்த் வாக்குமூலம்

...

arvoshan.com

மணிப்பூரில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் உயிரிழப்பு; 180-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

...

arvoshan.com

கரையை கடந்த அக்வான் புயலால் பெரும் பாதிப்பு இல்லை – ஒடிசா அமைச்சர்

...

arvoshan.com

இறுதி ஊர்வலத்தில் வி.எஸ்.பாபுவின் உடலைத் தோளில் சுமந்த முதல்வர் விஜய்!

...

arvoshan.com

தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

...

arvoshan.com

வந்தே பாரத் ரயிலில் 140 கி.மீ. பயணித்த 12 பேருக்கு ரூ.36,000 அபராதம்

...

arvoshan.com

13 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக காட்சிப்படுத்தப்படும் புத்தரின் புனித சின்னங்கள்

...

arvoshan.com

சீனாவின் Jetour T2 அடிப்படையில் புதிய SUV: இந்தியாவின் JSW நிறுவனம் அறிமுகப்படுத்தத் திட்டம்

...

arvoshan.com

தென்கிழக்காசியாவின் 11 நாடுகளுக்கு இலவச சுற்றுலா மின்னணு விசா – இந்தியா முன்மொழிவு

...

arvoshan.com

தோனி தமிழகத்துக்கு கிரிக்கெட்டைத் தாண்டிய பிணைப்பை வழங்கியவர் – மு.க.ஸ்டாலின்

...

arvoshan.com

இந்தியப் பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் சாதனை அளவில் அதிகரிப்பு – நவம்பரில் 9.53 பில்லியன் டொலர் முதலீடு

...

arvoshan.com

பிரேக் செயலிழந்த நிலையில் 463 கி.மீ. பயணித்த வந்தே பாரத் ரயில் – உயர் மட்ட விசாரணை ஆரம்பம்!

...

arvoshan.com

தெரு கிரிக்கெட் விளையாடி இந்தியப் பயணத்தை ஆரம்பித்த பிரித்தானிய இளவரசர் வில்லியம் – இளவரசி கேட்!

...

arvoshan.com

“தவறு செய்தவர்களை நீக்கத் துணிவில்லாத விஜய் எப்படி தூய சக்தியாக இருக்க முடியும்?” – சீமான் கேள்வி

...

arvoshan.com

அசாமில் பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதல்; 26 மாணவர்கள் உயிரிழந்ததாக அச்சம்

...