வந்தே பாரத் ரயிலில் 140 கி.மீ. பயணித்த 12 பேருக்கு ரூ.36,000 அபராதம்

arvloshan.com

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில், உறவினர்களை வழியனுப்புவதற்காக வந்தே பாரத் விரைவு ரயிலில் ஏறிய 12 பேர், ரயில் புறப்பட்டதால் சுமார் 140 கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 12 பேருக்கும் ரயில்வே நிர்வாகம் மொத்தமாக 36,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

வாரணாசி - புதுடெல்லி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயில் (22415), கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கான்பூர் சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

இதன்போது, கான்பூரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 12 பேர், ரயிலில் பயணிக்கவிருந்த தமது குடும்ப உறுப்பினர்களின் உடைமைகளை இருக்கைகளில் வைப்பதற்கும், அவர்களை இருக்கைகளில் அமர வைப்பதற்கும் ரயிலுக்குள் ஏறியுள்ளனர்.

அவர்கள் ரயிலுக்குள் இருந்தபோதே புறப்படும் நேரம் நெருங்கியதால், ரயிலின் தானியங்கி கதவுகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேரும் ரயிலுக்குள் சிக்கிக்கொண்டனர்.

ரயில் புறப்பட்டுச் சென்றதைக் கண்ட நடைமேடையில் நின்றிருந்த அவர்களது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, ரயிலுக்குள் சிக்கியவர்கள் கதவுகளைத் திறக்குமாறு ரயில்வே ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர். எனினும், பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் காரணமாக ஓடும் ரயிலில் கதவுகளைத் திறக்க முடியாது என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர், இச்சம்பவம் தொடர்பாக துண்ட்லா ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் உத்தரவின்பேரில், கான்பூரிலிருந்து சுமார் 140 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இடாவா சந்திப்பு ரயில் நிலையத்தில் காலை 10.49 மணியளவில் ரயில் நிறுத்தப்பட்டது.

அங்கு தயாராக இருந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து, ரயிலுக்குள் சிக்கியிருந்த 12 பேரையும் பாதுகாப்பாக கீழே இறக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

முறையான பயணச்சீட்டு அல்லது அனுமதியின்றி ரயிலுக்குள் ஏறியதற்காக, ஒவ்வொருவருக்கும் தலா 3,000 ரூபாய் வீதம் மொத்தம் 36,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற அனுமதியற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கப்பட்ட பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

வந்தே பாரத் போன்ற நவீன விரைவு ரயில்களில் பயணிகளை வழியனுப்ப வருபவர்கள் ரயிலுக்குள் ஏறுவதைத் தவிர்த்து, நடைமேடையிலேயே இருக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

...

arvoshan.com

13 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக காட்சிப்படுத்தப்படும் புத்தரின் புனித சின்னங்கள்

...

arvoshan.com

சீனாவின் Jetour T2 அடிப்படையில் புதிய SUV: இந்தியாவின் JSW நிறுவனம் அறிமுகப்படுத்தத் திட்டம்

...

arvoshan.com

தென்கிழக்காசியாவின் 11 நாடுகளுக்கு இலவச சுற்றுலா மின்னணு விசா – இந்தியா முன்மொழிவு

...

arvoshan.com

தோனி தமிழகத்துக்கு கிரிக்கெட்டைத் தாண்டிய பிணைப்பை வழங்கியவர் – மு.க.ஸ்டாலின்

...

arvoshan.com

இந்தியப் பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் சாதனை அளவில் அதிகரிப்பு – நவம்பரில் 9.53 பில்லியன் டொலர் முதலீடு

...

arvoshan.com

பிரேக் செயலிழந்த நிலையில் 463 கி.மீ. பயணித்த வந்தே பாரத் ரயில் – உயர் மட்ட விசாரணை ஆரம்பம்!

...

arvoshan.com

தெரு கிரிக்கெட் விளையாடி இந்தியப் பயணத்தை ஆரம்பித்த பிரித்தானிய இளவரசர் வில்லியம் – இளவரசி கேட்!

...

arvoshan.com

“தவறு செய்தவர்களை நீக்கத் துணிவில்லாத விஜய் எப்படி தூய சக்தியாக இருக்க முடியும்?” – சீமான் கேள்வி

...

arvoshan.com

அசாமில் பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதல்; 26 மாணவர்கள் உயிரிழந்ததாக அச்சம்

...

arvoshan.com

தவெகவின் ஆறு மாத கால ஆட்சி நம்பிக்கை அளிப்பதாக இல்லை – மு.வீரபாண்டியன்

...

arvoshan.com

சுற்றுலா, மருத்துவம், வர்த்தகம் உள்ளிட்டவற்றுக்கான இந்திய விசா நடைமுறைகளில் அதிரடி மாற்றம்!

...

arvoshan.com

நவம்பர் 15ஆம் திகதிக்குள் வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

...

arvoshan.com

சென்னையில் ரூ.1,401 கோடி செலவில் 6,157 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் – முதல்வர் விஜய் ஒப்புதல்

...

arvoshan.com

“தவெக எம்.எல்.ஏக்களுக்கு சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரமா?” – அண்ணாமலை கேள்வி

...