13 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக காட்சிப்படுத்தப்படும் புத்தரின் புனித சின்னங்கள்

arvloshan.com

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் நம்சாய் பகுதியில் அமைந்துள்ள கோல்டன் பகோடா விகாரையில், ஷாக்கியமுனி புத்தரின் புனித நினைவுச் சின்னங்கள் பொதுமக்களின் வழிபாட்டுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதனைத் தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பௌத்த பக்தர்கள் அங்கு வருகை தந்து வருகின்றனர்.

இந்திய கலாசார அமைச்சின் தகவலின்படி, நவம்பர் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெற்ற முதல் இரண்டு நாட்களில் மாத்திரம் 12,000க்கும் அதிகமான பக்தர்கள் கோல்டன் பகோடாவுக்கு வருகை தந்துள்ளனர்.

13 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் புனித நினைவுச் சின்னங்கள் மீண்டும் அருணாச்சலப் பிரதேசத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அப்பகுதி பௌத்த மக்களுக்கு புத்தபெருமானின் புனித நினைவுச் சின்னங்களைத் தரிசித்து வழிபடுவதற்கான அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தப் புனித நினைவுச் சின்னங்கள் இந்தியாவின் புதுடில்லியில் அமைந்துள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உத்தரப் பிரதேசத்தின் பிப்ரஹ்வா பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இவை, புத்தபெருமானின் வரலாற்றுடன் தொடர்புடைய பண்டைய கபிலவஸ்து மற்றும் சாக்கியர் பாரம்பரியத்துடன் தொடர்புபட்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சி ஒக்டோபர் 31ஆம் திகதி தவாங் பௌத்த விகாரையில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் பொம்டிலா பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதியாக நம்சாய் கோல்டன் பகோடாவை வந்தடைந்துள்ளது.

தவாங் பகுதியில் நடைபெற்ற கண்காட்சியை 31,000க்கும் அதிகமான பக்தர்களும், பொம்டிலாவில் நடைபெற்ற கண்காட்சியை 35,000க்கும் அதிகமான பக்தர்களும் தரிசித்துள்ளனர்.

இதன்படி, நவம்பர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மூன்று இடங்களிலும் மொத்தம் 78,000க்கும் அதிகமானோர் புனித நினைவுச் சின்னங்களைத் தரிசித்துள்ளனர்.

'கொங்மு காம்' எனவும் அழைக்கப்படும் கோல்டன் பகோடா, இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் தேரவாத பௌத்த மதத்தின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பௌத்த சமூகங்களுடன் இவ்விகாரை மத மற்றும் கலாசாரத் தொடர்புகளைக் கொண்டுள்ளது.

இந்தக் கண்காட்சியை அருணாச்சலப் பிரதேச ஆளுநர் கைலவ்ய திரிவிக்ரம் பர்நாயக் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதன்போது பௌத்த மதத் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் சர்வதேச பௌத்த கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

பொதுமக்களின் வழிபாட்டுக்காக இந்தப் புனித நினைவுச் சின்னங்கள் நவம்பர் 20ஆம் திகதி வரை காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன், நவம்பர் 21ஆம் திகதி மீண்டும் புதுடில்லி தேசிய அருங்காட்சியகத்திற்குக் கொண்டுசெல்லப்படவுள்ளன.

இந்திய கலாசார அமைச்சு, அருணாச்சலப் பிரதேச அரசாங்கம், தேசிய அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச பௌத்த கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டிணைவில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய பௌத்த சமூகங்களுடனான மத மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலும் புத்தபெருமானின் புனித நினைவுச் சின்னங்களுக்கான கண்காட்சிகளை இந்தியா ஏற்கனவே ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

...

arvoshan.com

வந்தே பாரத் ரயிலில் 140 கி.மீ. பயணித்த 12 பேருக்கு ரூ.36,000 அபராதம்

...

arvoshan.com

சீனாவின் Jetour T2 அடிப்படையில் புதிய SUV: இந்தியாவின் JSW நிறுவனம் அறிமுகப்படுத்தத் திட்டம்

...

arvoshan.com

தென்கிழக்காசியாவின் 11 நாடுகளுக்கு இலவச சுற்றுலா மின்னணு விசா – இந்தியா முன்மொழிவு

...

arvoshan.com

தோனி தமிழகத்துக்கு கிரிக்கெட்டைத் தாண்டிய பிணைப்பை வழங்கியவர் – மு.க.ஸ்டாலின்

...

arvoshan.com

இந்தியப் பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் சாதனை அளவில் அதிகரிப்பு – நவம்பரில் 9.53 பில்லியன் டொலர் முதலீடு

...

arvoshan.com

பிரேக் செயலிழந்த நிலையில் 463 கி.மீ. பயணித்த வந்தே பாரத் ரயில் – உயர் மட்ட விசாரணை ஆரம்பம்!

...

arvoshan.com

தெரு கிரிக்கெட் விளையாடி இந்தியப் பயணத்தை ஆரம்பித்த பிரித்தானிய இளவரசர் வில்லியம் – இளவரசி கேட்!

...

arvoshan.com

“தவறு செய்தவர்களை நீக்கத் துணிவில்லாத விஜய் எப்படி தூய சக்தியாக இருக்க முடியும்?” – சீமான் கேள்வி

...

arvoshan.com

அசாமில் பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதல்; 26 மாணவர்கள் உயிரிழந்ததாக அச்சம்

...

arvoshan.com

தவெகவின் ஆறு மாத கால ஆட்சி நம்பிக்கை அளிப்பதாக இல்லை – மு.வீரபாண்டியன்

...

arvoshan.com

சுற்றுலா, மருத்துவம், வர்த்தகம் உள்ளிட்டவற்றுக்கான இந்திய விசா நடைமுறைகளில் அதிரடி மாற்றம்!

...

arvoshan.com

நவம்பர் 15ஆம் திகதிக்குள் வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

...

arvoshan.com

சென்னையில் ரூ.1,401 கோடி செலவில் 6,157 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் – முதல்வர் விஜய் ஒப்புதல்

...

arvoshan.com

“தவெக எம்.எல்.ஏக்களுக்கு சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரமா?” – அண்ணாமலை கேள்வி

...