தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

arvloshan.com

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் உடலுக்கு தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ்.பாபுவுக்கு கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் பல்துறை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (19) பிற்பகல் 2.24 மணியளவில் வி.எஸ்.பாபு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அவரது உடல் சென்னை பெரம்பூரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், முதல்வர் விஜய்யும் வி.எஸ்.பாபுவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். இதன்போது, அவரது மனைவி பரிமளம் மற்றும் பிள்ளைகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

முன்னதாக, வி.எஸ்.பாபுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, மக்களுடன் நெருக்கமாகப் பழகி அனைவரின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றிருந்த அவரது திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அவரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வி.எஸ்.பாபுவின் மறைவையொட்டி இன்று முதல் ஏழு நாட்களுக்கு கட்சியின் சார்பில் துக்கம் அனுஷ்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏழு நாட்களும் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்படுவதுடன், கட்சிக் கொடியும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என முதல்வர் விஜய்யின் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

வந்தே பாரத் ரயிலில் 140 கி.மீ. பயணித்த 12 பேருக்கு ரூ.36,000 அபராதம்

...

arvoshan.com

13 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக காட்சிப்படுத்தப்படும் புத்தரின் புனித சின்னங்கள்

...

arvoshan.com

சீனாவின் Jetour T2 அடிப்படையில் புதிய SUV: இந்தியாவின் JSW நிறுவனம் அறிமுகப்படுத்தத் திட்டம்

...

arvoshan.com

தென்கிழக்காசியாவின் 11 நாடுகளுக்கு இலவச சுற்றுலா மின்னணு விசா – இந்தியா முன்மொழிவு

...

arvoshan.com

தோனி தமிழகத்துக்கு கிரிக்கெட்டைத் தாண்டிய பிணைப்பை வழங்கியவர் – மு.க.ஸ்டாலின்

...

arvoshan.com

இந்தியப் பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் சாதனை அளவில் அதிகரிப்பு – நவம்பரில் 9.53 பில்லியன் டொலர் முதலீடு

...

arvoshan.com

பிரேக் செயலிழந்த நிலையில் 463 கி.மீ. பயணித்த வந்தே பாரத் ரயில் – உயர் மட்ட விசாரணை ஆரம்பம்!

...

arvoshan.com

தெரு கிரிக்கெட் விளையாடி இந்தியப் பயணத்தை ஆரம்பித்த பிரித்தானிய இளவரசர் வில்லியம் – இளவரசி கேட்!

...

arvoshan.com

“தவறு செய்தவர்களை நீக்கத் துணிவில்லாத விஜய் எப்படி தூய சக்தியாக இருக்க முடியும்?” – சீமான் கேள்வி

...

arvoshan.com

அசாமில் பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதல்; 26 மாணவர்கள் உயிரிழந்ததாக அச்சம்

...

arvoshan.com

தவெகவின் ஆறு மாத கால ஆட்சி நம்பிக்கை அளிப்பதாக இல்லை – மு.வீரபாண்டியன்

...

arvoshan.com

சுற்றுலா, மருத்துவம், வர்த்தகம் உள்ளிட்டவற்றுக்கான இந்திய விசா நடைமுறைகளில் அதிரடி மாற்றம்!

...

arvoshan.com

நவம்பர் 15ஆம் திகதிக்குள் வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

...

arvoshan.com

சென்னையில் ரூ.1,401 கோடி செலவில் 6,157 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் – முதல்வர் விஜய் ஒப்புதல்

...

arvoshan.com

“தவெக எம்.எல்.ஏக்களுக்கு சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரமா?” – அண்ணாமலை கேள்வி

...