10,000 ரூபா லஞ்சம் பெற்ற வனத்துறை கள உதவியாளர் கைது!

arvloshan.com

புத்தள பீட் வன அலுவலகத்தில் கடமையாற்றி வந்த வனத்துறை கள உதவியாளர் ஒருவர் 10,000 ரூபா லஞ்சம் கேட்டுக் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் பற்றிய சாட்டியங்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.

ஹேவாலுனுவில பகுதியைச் சேர்ந்த சனத் குமார எனப்படும் அதிகாரியே இவ்வாறு அக்டோபர் 8 ஆம் திகதி மாலை புத்தள பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹேவாலுமன்கட பகுதியில் சுமார் மூன்று ஏக்கர் அரசாங்கக் காணியில், சட்டவிரோதமாக மரங்களை வெட்டியமைக்காக சட்ட நடவடிக்கை எடுக்காமல் தடுப்பதற்கும், அங்கு சேனைப்பயிர்ச் செய்கையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதி அளிப்பதற்காகவும் முறைப்பாட்டாளரிடம் குறித்த அதிகாரி பல தடவைகளில் பணம் பெற்றுள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சட்டவிரோத ஏற்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காக, 2026 அக்டோபர் மாதத்திற்கான மாதாந்த கொடுப்பனவாக அவர் 10,000 ரூபாவை கோரிப் பெற்றுக்கொண்டபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

சவூதி அரேபியாவின் சிவிலியன் விமாநிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு இலங்கை கடும் கண்டனம்

...

arvoshan.com

“மெற்றோ பேருந்துகளில் மகா சங்கத்தினருக்கும் இட ஒதுக்கீடு இல்லை” - நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான சாடல்!

...

arvoshan.com

களுத்துறை உணவக உரிமையாளர் படுகொலை: வெளிவரும் புதிய தகவல்கள்

...

arvoshan.com

ஜனாதிபதி ஞாயிறன்று இரு மாபெரும் பேரணிகளில் உரை

...

arvoshan.com

பதுளையில் 'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட 124 குடும்பங்களுக்குப் புதிய வீடுகள்: பணிகளை ஆரம்பித்தார் அமைச்சர்!

...

arvoshan.com

கொள்ளையடித்துச் செல்ல முயன்ற நபரை மடக்கிப் பிடித்த தம்பதிக்கு பொலிஸார் பணப்பரிசு!

...

arvoshan.com

முன்மொழியப்பட்ட PSTA சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்!

...

arvoshan.com

PTA இன் கீழ் கைது செய்யப்படுவதைத் தடுக்க கோட்டாபய உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

...

arvoshan.com

வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் போலி விளம்பரங்கள்: கணினி அவசர கால பதிலளிப்பு மையம் எச்சரிக்கை!

...

arvoshan.com

5 மாவட்டங்களில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவு சேவை ஆரம்பம்

...

arvoshan.com

ஈரானியக் கப்பல்கள் விவகாரம்: பிராந்தியப் பேச்சுவார்த்தைக்கு முன்னணி சோசலிசக் கட்சி அழைப்பு

...

arvoshan.com

கச்சத்தீவு பிரச்சினை: இந்திய உச்சநீதிமன்றத்தின் அவதானிப்பை வரவேற்பதாக இலங்கை மீன்பிடி அமைச்சர் அறிவிப்பு

...

arvoshan.com

நாடாளுமன்ற ஊழல் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கிறார் திலான் விஜேசிங்க!

...

arvoshan.com

கொழும்பு முன்னாள் பிரதான நீதவான் திலின கமகே நீதித்துறை சேவையிலிருந்து நிரந்தரமாக நீக்கம்

...

arvoshan.com

பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தால் கடும் சட்ட நடவடிக்கை: போக்குவரத்து அமைச்சர் எச்சரிக்கை

...