PTA இன் கீழ் கைது செய்யப்படுவதைத் தடுக்க கோட்டாபய உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தம்மைப் பொலிஸார் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக, தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் பேராணை உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி அவர் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இந்நிலையிலேயே, அந்த உத்தரவுக்கு எதிராக அவர் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்த மேல்முறையீட்டு மனுவில் பொலிஸ் மா அதிபர் , குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் உள்ளிட்ட பல தரப்பினர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.