பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தால் கடும் சட்ட நடவடிக்கை: போக்குவரத்து அமைச்சர் எச்சரிக்கை

arvloshan.com

மெட்ரோ பேருந்துகளுக்குச் சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராகப் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்:

"சாரதிகளாக இருந்தாலும் சரி அல்லது பேருந்து உரிமையாளர்களாக இருந்தாலும் சரி, இலங்கை மக்களுக்குச் சொந்தமான பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் எவராக இருந்தாலும், அவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.

தற்போது சுமார் 100 மெட்ரோ பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளன. பெரும்பாலான தனியார் பேருந்துகள் இந்தச் சேவைக்கு எந்தவித இடையூறையும் ஏற்படுத்தவில்லை. ஒரு சிலரே இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இதனைப் ஒட்டுமொத்தத் தனியார் பேருந்து உரிமையாளர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பிரச்சினையாக நான் கருதவில்லை" என்று அவர் கூறினார்.

அத்துடன், இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பேருந்துகளுக்குச் சேதம் விளைவிப்பதைத் தவிர்த்து, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த புதிய போக்குவரத்துத் திட்டத்திற்குத் தங்களை அமைவுபடுத்திக் கொள்ள (adapt) வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மேலும், இன்னும் ஒரு வருடத்திற்குள் மெட்ரோ பேருந்து சேவையில் தனியார் துறையினரும் பங்கெடுப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

சவூதி அரேபியாவின் சிவிலியன் விமாநிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு இலங்கை கடும் கண்டனம்

...

arvoshan.com

“மெற்றோ பேருந்துகளில் மகா சங்கத்தினருக்கும் இட ஒதுக்கீடு இல்லை” - நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான சாடல்!

...

arvoshan.com

களுத்துறை உணவக உரிமையாளர் படுகொலை: வெளிவரும் புதிய தகவல்கள்

...

arvoshan.com

ஜனாதிபதி ஞாயிறன்று இரு மாபெரும் பேரணிகளில் உரை

...

arvoshan.com

பதுளையில் 'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட 124 குடும்பங்களுக்குப் புதிய வீடுகள்: பணிகளை ஆரம்பித்தார் அமைச்சர்!

...

arvoshan.com

கொள்ளையடித்துச் செல்ல முயன்ற நபரை மடக்கிப் பிடித்த தம்பதிக்கு பொலிஸார் பணப்பரிசு!

...

arvoshan.com

முன்மொழியப்பட்ட PSTA சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்!

...

arvoshan.com

PTA இன் கீழ் கைது செய்யப்படுவதைத் தடுக்க கோட்டாபய உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

...

arvoshan.com

வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் போலி விளம்பரங்கள்: கணினி அவசர கால பதிலளிப்பு மையம் எச்சரிக்கை!

...

arvoshan.com

5 மாவட்டங்களில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவு சேவை ஆரம்பம்

...

arvoshan.com

10,000 ரூபா லஞ்சம் பெற்ற வனத்துறை கள உதவியாளர் கைது!

...

arvoshan.com

ஈரானியக் கப்பல்கள் விவகாரம்: பிராந்தியப் பேச்சுவார்த்தைக்கு முன்னணி சோசலிசக் கட்சி அழைப்பு

...

arvoshan.com

கச்சத்தீவு பிரச்சினை: இந்திய உச்சநீதிமன்றத்தின் அவதானிப்பை வரவேற்பதாக இலங்கை மீன்பிடி அமைச்சர் அறிவிப்பு

...

arvoshan.com

நாடாளுமன்ற ஊழல் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கிறார் திலான் விஜேசிங்க!

...

arvoshan.com

கொழும்பு முன்னாள் பிரதான நீதவான் திலின கமகே நீதித்துறை சேவையிலிருந்து நிரந்தரமாக நீக்கம்

...