5 மாவட்டங்களில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவு சேவை ஆரம்பம்
புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யும் சேவைகள், எதிர்வரும் அக்டோபர் 19 ஆம் திகதி முதல் ஐந்து மாவட்ட செயலகங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதற்கமைய, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்ட செயலகங்களில் இச்சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
பொதுமக்கள் தங்களின் புதிய மோட்டார் சைக்கிள்களை மாவட்ட மட்டத்திலேயே இலகுவாகப் பதிவு செய்து கொள்வதற்கு வசதி செய்யும் நோக்குடனேயே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.