வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் போலி விளம்பரங்கள்: கணினி அவசர கால பதிலளிப்பு மையம் எச்சரிக்கை!

arvloshan.com

சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக அனுமதி மற்றும் விசா விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர கால பதிலளிப்பு மையம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாட்டுக் கல்வி வாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் விளம்பரங்களை நம்பி, பல பெற்றோர்களும் மாணவர்களும் பல லட்சம் ரூபாய்களை இழந்துள்ளமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளைத் தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

மோசடி நடைபெறும் விதம்:

முன்னணி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் எனத் தங்களை அடையாளப்படுத்தும் நபர் அல்லது குழுக்கள், பதிவுக் கட்டணம் மற்றும் முதற்கட்டக் கல்விக் கட்டணங்களைச் செலுத்தும் பட்சத்தில் பல்கலைக்கழக அனுமதி, மாணவர் விசா , பகுதிநேர அல்லது முழுநேரப் பணி அனுமதிப் பத்திரம் மற்றும் இறுதியில் குடியுரிமை போன்றவற்றை எளிதாகப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளிக்கின்றனர்.   

இதற்காக மிகவும் நம்பத்தகுந்த வகையில் தயாரிக்கப்பட்ட காணொளிகள் (Videos), புகைப்படங்கள் மற்றும் போலி ஆவணங்களை மின்னஞ்சல் (Email) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) செயலிகள் மூலம் அனுப்பிப் பெற்றோர்களையும் மாணவர்களையும் நம்ப வைக்கின்றனர். பின்னர், கட்டணங்களை வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு வைப்புச் செய்யுமாறு கோருகின்றனர். நிதியை ஏற்றுக்கொண்டவுடன், குறித்த மோசடிக்காரர்கள் அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துவிட்டுத் தலைமறைவாகிவிடுவதாக கணினி அவசர கால பதிலளிப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்:

எனவே, வெளிநாட்டுக் கல்விக்காகப் பண பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகப் பிரதிநிதிகள், அவசியமான ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களின் உண்மைத்தன்மையைச் சரியாகச் சரிபார்க்குமாறு கணினி அவசர கால பதிலளிப்பு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு உயர் கல்வி வாய்ப்புகளைத் தேடும் போது சட்டப்பூர்வமான மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ வழிமுறைகளை மட்டுமே பயன்படுத்துமாறும் பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

சவூதி அரேபியாவின் சிவிலியன் விமாநிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு இலங்கை கடும் கண்டனம்

...

arvoshan.com

“மெற்றோ பேருந்துகளில் மகா சங்கத்தினருக்கும் இட ஒதுக்கீடு இல்லை” - நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான சாடல்!

...

arvoshan.com

களுத்துறை உணவக உரிமையாளர் படுகொலை: வெளிவரும் புதிய தகவல்கள்

...

arvoshan.com

ஜனாதிபதி ஞாயிறன்று இரு மாபெரும் பேரணிகளில் உரை

...

arvoshan.com

பதுளையில் 'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட 124 குடும்பங்களுக்குப் புதிய வீடுகள்: பணிகளை ஆரம்பித்தார் அமைச்சர்!

...

arvoshan.com

கொள்ளையடித்துச் செல்ல முயன்ற நபரை மடக்கிப் பிடித்த தம்பதிக்கு பொலிஸார் பணப்பரிசு!

...

arvoshan.com

முன்மொழியப்பட்ட PSTA சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்!

...

arvoshan.com

PTA இன் கீழ் கைது செய்யப்படுவதைத் தடுக்க கோட்டாபய உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

...

arvoshan.com

5 மாவட்டங்களில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவு சேவை ஆரம்பம்

...

arvoshan.com

10,000 ரூபா லஞ்சம் பெற்ற வனத்துறை கள உதவியாளர் கைது!

...

arvoshan.com

ஈரானியக் கப்பல்கள் விவகாரம்: பிராந்தியப் பேச்சுவார்த்தைக்கு முன்னணி சோசலிசக் கட்சி அழைப்பு

...

arvoshan.com

கச்சத்தீவு பிரச்சினை: இந்திய உச்சநீதிமன்றத்தின் அவதானிப்பை வரவேற்பதாக இலங்கை மீன்பிடி அமைச்சர் அறிவிப்பு

...

arvoshan.com

நாடாளுமன்ற ஊழல் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கிறார் திலான் விஜேசிங்க!

...

arvoshan.com

கொழும்பு முன்னாள் பிரதான நீதவான் திலின கமகே நீதித்துறை சேவையிலிருந்து நிரந்தரமாக நீக்கம்

...

arvoshan.com

பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தால் கடும் சட்ட நடவடிக்கை: போக்குவரத்து அமைச்சர் எச்சரிக்கை

...