முன்மொழியப்பட்ட PSTA சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்!

arvloshan.com

அனுர குமார திசாநாயக்க அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவை (PSTA) உடனடியாக இரத்துச் செய்யக் கோரி, யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (09) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இப்போராட்டம் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பான மெசிடோ (MESIDO) அமைப்பினால் இப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாகவே, இந்த புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டு வருகின்றது.

எனினும், இப் புதிய சட்ட வரைவு தொடர்பாக சிவில் சமூக அமைப்புகள், சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கடுமையான கரிசனைகளையும் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, இச் சட்ட மூலத்தில் உள்ள பயங்கரவாதம் தொடர்பான தெளிவற்ற வரையறைகள், பிடியாணையின்றி கைது செய்தல் மற்றும் நீண்டகாலத் தடுப்புக் காவலில் வைப்பதற்கான அதிகாரங்கள், மக்களின் அடிப்படைச் சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இக் காரணங்களினால், முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்ட வரைவை முழுமையாகக் கைவிடுமாறு வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான கலந்துரையாடல்களும் எதிர்ப்புப் பிரசாரங்களும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

சவூதி அரேபியாவின் சிவிலியன் விமாநிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு இலங்கை கடும் கண்டனம்

...

arvoshan.com

“மெற்றோ பேருந்துகளில் மகா சங்கத்தினருக்கும் இட ஒதுக்கீடு இல்லை” - நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான சாடல்!

...

arvoshan.com

களுத்துறை உணவக உரிமையாளர் படுகொலை: வெளிவரும் புதிய தகவல்கள்

...

arvoshan.com

ஜனாதிபதி ஞாயிறன்று இரு மாபெரும் பேரணிகளில் உரை

...

arvoshan.com

பதுளையில் 'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட 124 குடும்பங்களுக்குப் புதிய வீடுகள்: பணிகளை ஆரம்பித்தார் அமைச்சர்!

...

arvoshan.com

கொள்ளையடித்துச் செல்ல முயன்ற நபரை மடக்கிப் பிடித்த தம்பதிக்கு பொலிஸார் பணப்பரிசு!

...

arvoshan.com

PTA இன் கீழ் கைது செய்யப்படுவதைத் தடுக்க கோட்டாபய உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

...

arvoshan.com

வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் போலி விளம்பரங்கள்: கணினி அவசர கால பதிலளிப்பு மையம் எச்சரிக்கை!

...

arvoshan.com

5 மாவட்டங்களில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவு சேவை ஆரம்பம்

...

arvoshan.com

10,000 ரூபா லஞ்சம் பெற்ற வனத்துறை கள உதவியாளர் கைது!

...

arvoshan.com

ஈரானியக் கப்பல்கள் விவகாரம்: பிராந்தியப் பேச்சுவார்த்தைக்கு முன்னணி சோசலிசக் கட்சி அழைப்பு

...

arvoshan.com

கச்சத்தீவு பிரச்சினை: இந்திய உச்சநீதிமன்றத்தின் அவதானிப்பை வரவேற்பதாக இலங்கை மீன்பிடி அமைச்சர் அறிவிப்பு

...

arvoshan.com

நாடாளுமன்ற ஊழல் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கிறார் திலான் விஜேசிங்க!

...

arvoshan.com

கொழும்பு முன்னாள் பிரதான நீதவான் திலின கமகே நீதித்துறை சேவையிலிருந்து நிரந்தரமாக நீக்கம்

...

arvoshan.com

பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தால் கடும் சட்ட நடவடிக்கை: போக்குவரத்து அமைச்சர் எச்சரிக்கை

...