மானிப்பாயில் பொலிஸார் வழிமறித்தபோது இளைஞன் திடீர் உயிரிழப்பு!

arvloshan.com

யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதான வீதியில், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் வீதி மறிப்புச் சோதனையில் ஈடுபட்டிருந்தவேளை, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரொருவர் திடீரென வீதியில் சரிந்து விழுந்து உயிரிழந்த சோகச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இன்று காலை மானிப்பாய் தேவாலயத்திற்கு முன்பாக வீதிப் போக்குவரத்துச் சோதனையில் பொலிஸார் ஈடுபட்டிருந்துள்ளனர். இதன்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞரை பொலிஸார் நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.

பொலிஸாரின் கட்டளையை அடுத்து, மோட்டார் சைக்கிளை வீதியோரமாக நிறுத்திய அவ்விளைஞன், கணப்பொழுதில் தானாகவே கீழே சரிந்து விழுந்து அசைவற்ற நிலையை அடைந்துள்ளார்.

உடனடியாகச் செயற்பட்ட அங்கிருந்தவர்கள் மற்றும் பொலிஸார், அவரை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு விரைந்து கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் பரிசோதனைகளின் பின்னர் உறுதிப்படுத்தினர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் மேலதிக உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் திடீர் மாரடைப்பினால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளனர்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

தற்போதைய பாதாள உலகத் தலைவர்கள் ராஜபக்ஷ ஆட்சியில் உருவானவர்களே: சரத் பொன்சேகா

...

arvoshan.com

ஹட்டனில் குப்பை மீள்சுழற்சி திட்டத்திற்கு எதிர்ப்பு: பெருந்தோட்ட மக்கள் போராட்டம்

...

arvoshan.com

எளிய முறையில் வீடு கட்ட தருவதாக மோசடி: கைதான இரு பெண்கள் விளக்கமறியலில் வைப்பு!

...

arvoshan.com

சவூதியில் இலங்கைத் தொழிலாளிக்கு மரண தண்டனை?: சஜித் கருணை கோரிக்கை

...

arvoshan.com

திருகோணமலை கொள்ளைச் சம்பவம்: இருவர் ஒரு மணி நேரத்திற்குள் கைது

...

arvoshan.com

மோட்டார் வாகனப் பிரச்சினைகளுக்காக புதிய வாட்ஸ்அப் அவசர இலக்கம் அறிமுகம்

...

arvoshan.com

பசில் ராஜபக்‌ஷவை கைது செய்ய இன்டர்போல் உதவி நாடல்

...

arvoshan.com

சவூதி மரண தண்டனை வழக்கு: பிரதமர் மோடியின் உதவியைக் கோருமாறு மனோ கணேசன் வேண்டுகோள்

...

arvoshan.com

“15 மணித்தியாலம் உழைத்தேன்; காணிகளையும் விற்றேன்”: சந்திரிக்கா நெகிழ்ச்சி

...

arvoshan.com

கடுமையான மின்னல் அபாயம்: 09 மாவட்டங்களுக்கு 'சிவப்பு எச்சரிக்கை'விடுப்பு

...

arvoshan.com

திருகோணமலை மதுபானசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளை: இருவர் கைது!

...

arvoshan.com

ஒவ்வொரு வகுப்பறைக்கும் 'ஸ்மார்ட் போர்ட்' வழங்கப்படமாட்டாது: பிரதமர் ஹரிணி அமரசூரிய திட்டவட்டம்

...

arvoshan.com

முல்லைத்தீவில் நவீன தபால் அலுவலகம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறப்பு

...

arvoshan.com

சமூக ஊடகப் பிரச்சாரங்கள் குறித்து எச்சரிக்கை!: நுகர்வோர் அதிகாரசபை

...

arvoshan.com

டெலிகிராம் மூலம் இணையவழி நிதி மோசடி: படுவத்த பகுதியில் பெண் கைது!

...