சவூதியில் இலங்கைத் தொழிலாளிக்கு மரண தண்டனை?: சஜித் கருணை கோரிக்கை

arvloshan.com

சவூதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்குக் கருணை காட்டுமாறு சவூதி அதிகாரிகளிடம் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள எதிர்கட்சித் தலைவர், ஒரு வார்த்தைக்காக ஒரு மனிதனின் உயிரைப் பறிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டதுடன், மன்னிப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளைத் திறந்து வைக்குமாறு சவூதி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நூற்றாண்டுகளாக நிலைத்து நிற்கும் ஒரு மதம், "ஒரு அவமதிப்பாகக் கருதப்படும் செயலால் குறைந்துவிடாது" என்று சுட்டிக்காட்டியுள்ள பிரேமதாச, ஒரு வார்த்தைக்குப் பதிலாக ஒரு உயிரைப் பறிப்பதில் அதன் வலிமை தங்கியிருக்கக் கூடாது என்றும் வாதாடியுள்ளார்.

அத்துடன், "ஒவ்வொரு மகத்தான மதத்தின் மையத்திலும் இருக்கும் கருணையை" சவூதி அரேபியா வெளிப்படுத்தும் என தான் நம்புவதாகவும் அவர் தனது பதிவில் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தொழிலாளியான சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளுக்கு மத்தியிலேயே சஜித் பிரேமதாச இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

தற்போதைய பாதாள உலகத் தலைவர்கள் ராஜபக்ஷ ஆட்சியில் உருவானவர்களே: சரத் பொன்சேகா

...

arvoshan.com

மானிப்பாயில் பொலிஸார் வழிமறித்தபோது இளைஞன் திடீர் உயிரிழப்பு!

...

arvoshan.com

ஹட்டனில் குப்பை மீள்சுழற்சி திட்டத்திற்கு எதிர்ப்பு: பெருந்தோட்ட மக்கள் போராட்டம்

...

arvoshan.com

எளிய முறையில் வீடு கட்ட தருவதாக மோசடி: கைதான இரு பெண்கள் விளக்கமறியலில் வைப்பு!

...

arvoshan.com

திருகோணமலை கொள்ளைச் சம்பவம்: இருவர் ஒரு மணி நேரத்திற்குள் கைது

...

arvoshan.com

மோட்டார் வாகனப் பிரச்சினைகளுக்காக புதிய வாட்ஸ்அப் அவசர இலக்கம் அறிமுகம்

...

arvoshan.com

பசில் ராஜபக்‌ஷவை கைது செய்ய இன்டர்போல் உதவி நாடல்

...

arvoshan.com

சவூதி மரண தண்டனை வழக்கு: பிரதமர் மோடியின் உதவியைக் கோருமாறு மனோ கணேசன் வேண்டுகோள்

...

arvoshan.com

“15 மணித்தியாலம் உழைத்தேன்; காணிகளையும் விற்றேன்”: சந்திரிக்கா நெகிழ்ச்சி

...

arvoshan.com

கடுமையான மின்னல் அபாயம்: 09 மாவட்டங்களுக்கு 'சிவப்பு எச்சரிக்கை'விடுப்பு

...

arvoshan.com

திருகோணமலை மதுபானசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளை: இருவர் கைது!

...

arvoshan.com

ஒவ்வொரு வகுப்பறைக்கும் 'ஸ்மார்ட் போர்ட்' வழங்கப்படமாட்டாது: பிரதமர் ஹரிணி அமரசூரிய திட்டவட்டம்

...

arvoshan.com

முல்லைத்தீவில் நவீன தபால் அலுவலகம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறப்பு

...

arvoshan.com

சமூக ஊடகப் பிரச்சாரங்கள் குறித்து எச்சரிக்கை!: நுகர்வோர் அதிகாரசபை

...

arvoshan.com

டெலிகிராம் மூலம் இணையவழி நிதி மோசடி: படுவத்த பகுதியில் பெண் கைது!

...