கடுமையான மின்னல் அபாயம்: 09 மாவட்டங்களுக்கு 'சிவப்பு எச்சரிக்கை'விடுப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை ஆகிய 09 மாவட்டங்களுக்கும் கடுமையான மின்னல் தாக்கம் குறித்த சிவப்பு எச்சரிக்கையை (Red Alert) வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று (19) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த முன்னெச்சரிக்கை அறிவித்தல் விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டின் 09 மாவட்டங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கையும், எஞ்சிய 16 மாவட்டங்களுக்குப் மஞ்சள் நிற எச்சரிக்கையும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பல இடங்களில் இடிமின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்கள் மற்றும் சேதங்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.