மோட்டார் வாகனப் பிரச்சினைகளுக்காக புதிய வாட்ஸ்அப் அவசர இலக்கம் அறிமுகம்
மோட்டார் வாகனப் பதிவு மற்றும் வாகனங்களால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாக பொதுமக்கள் தமது எழுத்துப்பூர்வமான முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் புதிய வாட்ஸ்அப் (WhatsApp) அவசர இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, 074 245 3300 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை நேரடியாக அனுப்ப முடியும்.
பொதுமக்கள் தமக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து நேரடியாகவும் விரைவாகவும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்யும் நோக்கில் மோட்டார் போக்குவரத்து ஆணையாளரால் இந்தச் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வாகனப் பதிவுகளின் போது ஏற்படும் காலதாமதங்கள், ஒழுங்கீனங்கள் மற்றும் வாகன இயக்கங்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் எழுத்துப்பூர்வமான தகவல்களை இந்த வாட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.