பதுளையில் 'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட 124 குடும்பங்களுக்குப் புதிய வீடுகள்: பணிகளை ஆரம்பித்தார் அமைச்சர்!

arvloshan.com

'டிட்வா' (Ditwah) சூறாவளி அனர்த்தத்தினால் தமது வீடுகளை முழுமையாக இழந்த குடும்பங்களுக்காக, பதுளை மாவட்டத்தில் 124 புதிய வீடுகளை அமைக்கும் கட்டுமானப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

அரச வீட்டுத்திட்டத்தின் கீழ், பதுளை மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கான அடிக்கல் நட்டும் நிகழ்வுகள் நேற்றுமுன்தினம் (அக்டோபர் 08) தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் வெகுவிமர்சையாக நடைபெற்ன.

இத்திட்டத்தின் கீழ் ஹாலிஎல பிரதேச செயலகப் பிரிவில் 62 வீடுகளும், பதுளையில் 27 வீடுகளும், பசறையில் 35 வீடுகளும் கட்டப்படவுள்ளன. இதற்கமைய ஹாலிஎல - கொத்மல்லந்த, பதுளை - தெல்பத்த மற்றும் பசறை பல்லேகொல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட பிளேன்வத்தை ஆகிய இடங்களில் இப்புதிய வீடமைப்புத் திட்டங்களுக்கான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பாதுகாப்பான, நிரந்தர உறைவிட வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. இதற்கான காணிகளை அரசாங்கமே முழுமையாக வழங்கியுள்ளது.

இந்நிகழ்வில் பதுளை மாவட்டச் செயலாளர் சுனில் கலாம, பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், அரச உயர் அதிகாரிகள் மற்றும் பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

சவூதி அரேபியாவின் சிவிலியன் விமாநிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு இலங்கை கடும் கண்டனம்

...

arvoshan.com

“மெற்றோ பேருந்துகளில் மகா சங்கத்தினருக்கும் இட ஒதுக்கீடு இல்லை” - நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான சாடல்!

...

arvoshan.com

களுத்துறை உணவக உரிமையாளர் படுகொலை: வெளிவரும் புதிய தகவல்கள்

...

arvoshan.com

ஜனாதிபதி ஞாயிறன்று இரு மாபெரும் பேரணிகளில் உரை

...

arvoshan.com

கொள்ளையடித்துச் செல்ல முயன்ற நபரை மடக்கிப் பிடித்த தம்பதிக்கு பொலிஸார் பணப்பரிசு!

...

arvoshan.com

முன்மொழியப்பட்ட PSTA சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்!

...

arvoshan.com

PTA இன் கீழ் கைது செய்யப்படுவதைத் தடுக்க கோட்டாபய உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

...

arvoshan.com

வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் போலி விளம்பரங்கள்: கணினி அவசர கால பதிலளிப்பு மையம் எச்சரிக்கை!

...

arvoshan.com

5 மாவட்டங்களில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவு சேவை ஆரம்பம்

...

arvoshan.com

10,000 ரூபா லஞ்சம் பெற்ற வனத்துறை கள உதவியாளர் கைது!

...

arvoshan.com

ஈரானியக் கப்பல்கள் விவகாரம்: பிராந்தியப் பேச்சுவார்த்தைக்கு முன்னணி சோசலிசக் கட்சி அழைப்பு

...

arvoshan.com

கச்சத்தீவு பிரச்சினை: இந்திய உச்சநீதிமன்றத்தின் அவதானிப்பை வரவேற்பதாக இலங்கை மீன்பிடி அமைச்சர் அறிவிப்பு

...

arvoshan.com

நாடாளுமன்ற ஊழல் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கிறார் திலான் விஜேசிங்க!

...

arvoshan.com

கொழும்பு முன்னாள் பிரதான நீதவான் திலின கமகே நீதித்துறை சேவையிலிருந்து நிரந்தரமாக நீக்கம்

...

arvoshan.com

பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தால் கடும் சட்ட நடவடிக்கை: போக்குவரத்து அமைச்சர் எச்சரிக்கை

...