முதல் 200 நாட்களில் 18.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்ற விஜய் அரசு!
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் 200 நாட்களுக்குள் சுமார் 18.7 பில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 1.87 இலட்சம் கோடி ரூபாய்) பெறுமதியான முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது ‘வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் மாற்றத்திற்கான மாநாட்டில்’ 78 புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தங்களின் மொத்த பெறுமதி 58,214 கோடி இந்திய ரூபா (6.3 பில்லியன் அமெரிக்க டொலர்) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீட்டுத் திட்டங்கள் ஊடாக, தமிழகத்தின் 25 மாவட்டங்களில் 65,786 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், விஜய் தலைமையிலான அரசு இதுவரையில் 190 முதலீட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. இதன் மூலம் சுமார் இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்னணுவியல், குறைக்கடத்திகள் (Semiconductors), விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் கப்பல் கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை இலக்காகக் கொண்டு இந்த முதலீட்டு உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இவை முதலீட்டுக்கான உறுதிமொழிகள் மட்டுமே என்பதுடன், திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் அடிப்படையிலேயே உண்மையான முதலீடுகளும் வேலைவாய்ப்பு உருவாக்கமும் அமையும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.