முதன்முறையாக விண்கலத்தை வெற்றிகரமாகப் பிடித்து சாதனை படைத்த SpaceX!

arvloshan.com

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான SpaceX, தனது Starship விண்கலத்தை ஏவப்பட்ட அதே ஏவுதளக் கோபுரத்திற்குத் திரும்பக் கொண்டுவந்து, இயந்திரக் கரங்களின் உதவியுடன் வெற்றிகரமாகப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஏவுதளத்திலிருந்து வெள்ளிக்கிழமை ஏவப்பட்ட Starship விண்கலம், தனது நீண்டகால விண்வெளிப் பயணத்தை நிறைவு செய்து சனிக்கிழமை மீண்டும் பூமிக்குத் திரும்பியது.

இதன்போது, ஏவுதளக் கோபுரத்தின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இயந்திரங்களால் இயக்கப்படும் இரண்டு பாரிய கரங்களுக்கு இடையில் விண்கலம் மிகவும் துல்லியமாக இறக்கப்பட்டு பிடிக்கப்பட்டது.

முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்வெளி ராக்கெட் கட்டமைப்பை உருவாக்கும் SpaceX நிறுவனத்தின் சுமார் பத்தாண்டு கால முயற்சியில் இது மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

22 மணிநேரத்திற்கும் அதிகமான விண்வெளிப் பயணம்

உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ராக்கெட் கட்டமைப்பான Starship இன் 15ஆவது சோதனைப் பயணத்திலேயே இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின்போது Starship விண்கலம் பூமியை 14 முறை சுற்றி வந்ததுடன், 22 மணிநேரத்திற்கும் மேலாக விண்வெளியில் பயணித்துள்ளது. மேலும், 26 Starlink செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது.

பல பில்லியன் டொலர் செலவில் முன்னெடுக்கப்படும் Starship திட்டத்தின் முக்கிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.

SpaceX நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க், செயற்கைக்கோள் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கும், எதிர்காலத்தில் மனிதர்களை நிலவுக்கும் செவ்வாய்க்கும் அனுப்புவதற்கும் இந்தத் திட்டத்தை முக்கியமானதாகக் கருதுகிறார்.

இந்த வெற்றிக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASAவும் வரவேற்புத் தெரிவித்துள்ளது.

இந்த தசாப்தத்தின் பிற்பகுதியில் Artemis திட்டத்தின் கீழ் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்குவதற்கும், அங்கு நிரந்தர தளமொன்றை அமைப்பதற்கும் Starship விண்கலத்தைப் பயன்படுத்த NASA பல பில்லியன் டொலர்களை முதலீடு செய்து வருகிறது.

இந்தச் சாதனை குறித்து NASA நிர்வாகி ஜாரெட் ஐசக்மன் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில், இது கிட்டத்தட்ட ஒரு மாயாஜாலம் போன்ற அனுபவம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராக்கெட்டின் கீழ்ப்பகுதியைப் பிடிக்கும் முயற்சி தோல்வி

இதற்கிடையில், Starship விண்கலத்தை விண்ணில் செலுத்திய ராக்கெட்டின் கீழ்ப்பகுதியான Super Heavy Booster பகுதியையும் ஏவுதளக் கோபுரத்தின் இயந்திரக் கரங்கள் மூலம் பிடிப்பதற்கு SpaceX திட்டமிட்டிருந்தது.

எனினும், அந்த முயற்சி கைவிடப்பட்டதுடன், வெள்ளிக்கிழமை ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த ராக்கெட்டின் கீழ்ப்பகுதி மெக்சிகோ வளைகுடா பகுதியில் வெடித்துச் சிதறியது.

ராக்கெட்டின் இயந்திரங்கள் எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே செயலிழந்ததாக SpaceX நிறுவனத்தின் கேட் டைஸ் தெரிவித்துள்ளார்.

ராக்கெட்டின் வழிகாட்டி அமைப்பு, அது சரியான நிலையில் இல்லை என்பதை உணர்ந்ததைத் தொடர்ந்து, தானாகவே அழிக்கும் பாதுகாப்பு நடைமுறையைச் செயல்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் பொறியியலாளர்கள் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கு முன்னர் மூன்று சோதனைப் பயணங்களின்போது Super Heavy Booster பகுதியை வெற்றிகரமாகப் பிடித்திருந்த SpaceX, முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் விண்வெளிப் பயணச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

மைக்ரோசொப்ட் சேவைகளில் உலகளாவிய முடக்கம் – ஒரே தொழில்நுட்ப நிறுவனத்தைச் சார்ந்திருப்பதன் அபாயம் அம்பலம்

...

arvoshan.com

மைக்ரோசொஃப்ட் சேவைகளில் உலகளாவிய முடக்கம் – Outlook, Teams, Copilot பயன்பாடுகளை மீளமைப்பதில் சிக்கல்!

...

arvoshan.com

மைக்ரோசொஃப்ட் சேவைகளில் பரவலான முடக்கம் – Outlook, Teams உள்ளிட்ட சேவைகள் பாதிப்பு!

...

arvoshan.com

காதல் மோசடிக்காகத் திருடப்பட்ட புகைப்படம்; உண்மையான நபரைத் தேடி வந்த காதல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள்!

...

arvoshan.com

குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகப் பதிவுகளை நீக்கும் வரை TikTok சேவையை நிறுத்த ஸ்பெயின் கோரிக்கை

...

arvoshan.com

குழந்தையின் வீடியோவை Snapchat-இல் வெளியிட்ட பெண்ணுக்கு சிறைத் தண்டனை – UAE-யிலிருந்து நாடு கடத்தவும் உத்தரவு

...

arvoshan.com

தினசரி வட்டி வழங்குவதாகக் கூறி 6.52 லட்சம் பேரிடம் ரூ.1,211 கோடி மோசடி!

...

arvoshan.com

போலி வேலைவாய்ப்பு நேர்காணல் மற்றும் AI கருவி மூலம் Binance நிறுவனத்திடமிருந்து 6.3 பில்லியன் டொலர் திருட்டு!

...

arvoshan.com

நினைவகச் சிப் விலை உயர்வு; ஆப்பிள் பங்குகள் 4% சரிவு – லாப வரம்பு குறையும் என புதிய தலைமை நிர்வாக அதிகாரி எச்சரிக்கை!

...

arvoshan.com

வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள் – இஸ்ரோ அறிவிப்பு

...

arvoshan.com

ChatGPT ஆலோசனையால் வலிப்பு நோய்க்கான மருந்தை நிறுத்தியதாகக் குற்றச்சாட்டு – OpenAI நிறுவனத்துக்கு எதிராக பெற்றோர் வழக்குத் தாக்கல்

...

arvoshan.com

AI தொழில்நுட்ப வளர்ச்சி: மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் 60,000 ஊழியர்களுக்கு தன்னார்வ விலகல் திட்டம்

...

arvoshan.com

செயற்கை நுண்ணறிவு விரிவாக்கத்திற்காக 3,500 கோடி டொலர் பங்கு வெளியீடு – மெட்டா அறிவிப்பு

...

arvoshan.com

பொறியியல் படிக்காமலேயே பறக்கும் காரை உருவாக்கி அசத்திய இளைஞர்!

...

arvoshan.com

அரச நிறுவனங்களுக்கு அவசர சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை!

...