குழந்தையின் வீடியோவை Snapchat-இல் வெளியிட்ட பெண்ணுக்கு சிறைத் தண்டனை – UAE-யிலிருந்து நாடு கடத்தவும் உத்தரவு

arvloshan.com

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE), ஐந்து வயதுச் சிறுமியின் காணொளியை அவரது பெற்றோரின் அனுமதியின்றி பொதுவான Snapchat கணக்கில் வெளியிட்ட பெண்ணுக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், தண்டனையை அனுபவித்த பின்னர் அவரை நாட்டிலிருந்து நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடும்ப நிகழ்வொன்றின்போது சிறுமி உணவு வகையொன்றின் பெயரைத் தவறாக உச்சரித்துக் கேலியாகப் பேசிய சம்பவத்தை உறவினரான குறித்த பெண் காணொளியாகப் பதிவு செய்துள்ளார். பின்னர் அதனைத் தனது பொதுவான Snapchat கணக்கில் வெளியிட்டுள்ளார்.

இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, 11,000 இற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

இதனையடுத்து, தனது மகளின் காணொளி எவ்வித அனுமதியுமின்றிப் பொதுவெளியில் பகிரப்பட்டுள்ளதை அறிந்த சிறுமியின் தந்தை, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுமியின் தனியுரிமை மற்றும் உளவியல் நலனுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அவர் கவலை வெளியிட்டிருந்தார்.

இரண்டு சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டு

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள், சிறுமியின் காணொளியை உரிய அனுமதியின்றி இணையத்தில் வெளியிட்டமை மற்றும் சிறுமியை கேலிக்கும் மனரீதியான பாதிப்புக்கும் உள்ளாக்கக்கூடிய வகையில் நடந்துகொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளைப் பெண் மீது சுமத்தியுள்ளனர்.

இதற்காக 2021ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க வதந்திகள் மற்றும் இணையக் குற்றங்களைத் தடுக்கும் கூட்டாட்சி சட்டம், அத்துடன் 2016ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க சிறுவர் உரிமைகள் தொடர்பான சட்டம் (Wadeema's Law) ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணையின்போது, காணொளியைப் பதிவு செய்து வெளியிட்டதைப் பெண் ஒப்புக்கொண்ட போதிலும், சிறுமியை வேண்டுமென்றே கேலி செய்யும் நோக்கம் தமக்கு இருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தனது Snapchat கணக்கு பொதுவானது என்றும், காணொளியைப் பதிவேற்றிய பின்னர் அது தனது கட்டுப்பாட்டை மீறிப் பரவியதாகவும் அவர் வாதிட்டுள்ளார்.

எனினும், பொலிஸ் அறிக்கைகள், ஏனைய சாட்சியங்கள் மற்றும் பெண்ணின் ஒப்புதல் வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மேலும், தீங்கு விளைவிக்கும் நோக்கம் இல்லாவிட்டாலும், உரிய அனுமதியின்றி சிறுவரின் காணொளியைப் பொதுவெளியில் வெளியிடுவது குற்றமாக அமையக்கூடும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, பெண்ணுக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அதன் பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு கடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

காணொளியைப் பகிர்பவர்களுக்கும் சட்டப் பொறுப்பு

Bin Suwaidan Advocates and Legal Consultants நிறுவனத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ரஷீத் பின் சுவைதான் (Rashid Bin Suwaidan), இந்தச் சம்பவம் சமூக வலைத்தளப் பயன்பாட்டாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குடும்ப நிகழ்வொன்றில் சாதாரணமாகப் பதிவு செய்யப்படும் காணொளிகூட சமூக வலைத்தளங்களில் பகிரப்படும்போது பாரதூரமான சட்டப் பிரச்சினையாக மாறக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணொளியைப் பதிவு செய்தவருக்கு மட்டுமன்றி, அதனை முதலில் பதிவேற்றியவர், பின்னர் பகிர்ந்தவர்கள் மற்றும் மீண்டும் வெளியிட்டவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர்களது ஈடுபாட்டைப் பொறுத்து சட்டப் பொறுப்பு ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவரின் புகைப்படத்தை அல்லது காணொளியைப் பதிவு செய்வதற்கு அனுமதி வழங்குவது, அதனைப் பொதுவெளியில் வெளியிடுவதற்கான அனுமதியாகக் கருதப்பட முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறுவர்களின் புகைப்படங்கள், காணொளிகளைப் பகிர்வதில் எச்சரிக்கை

சிறுவர்களின் தனியுரிமை, கண்ணியம் மற்றும் உளவியல், உணர்வு ரீதியான நலன்களைப் பாதுகாக்கும் வகையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் Wadeema's Law சட்டம் நடைமுறையில் உள்ளது.

பெற்றோர் அல்லது சட்டபூர்வ பாதுகாவலரின் உரிய அனுமதியின்றி சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிர்வது கடுமையான சட்ட விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.

உறவினர்களால் சாதாரண நகைச்சுவையாகக் கருதப்படும் ஒரு சம்பவம்கூட இணையத்தில் பரவும்போது சிறுவர்களுக்கு அவமானத்தையும் உளவியல் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும்.

கமெராவுக்கு முன்னால் ஒரு குழந்தை சிரிப்பதோ அல்லது மகிழ்ச்சியாக இருப்பதோ, அதன் புகைப்படம் அல்லது காணொளியைப் பொதுவெளியில் பகிர்வதற்கு அந்தக் குழந்தை அனுமதி வழங்கியுள்ளது என்று அர்த்தமல்ல என சட்டத்தரணி ரஷீத் பின் சுவைதான் தெரிவித்துள்ளார்.


ஏனைய செய்திகள்

arvoshan.com

தினசரி வட்டி வழங்குவதாகக் கூறி 6.52 லட்சம் பேரிடம் ரூ.1,211 கோடி மோசடி!

...

arvoshan.com

போலி வேலைவாய்ப்பு நேர்காணல் மற்றும் AI கருவி மூலம் Binance நிறுவனத்திடமிருந்து 6.3 பில்லியன் டொலர் திருட்டு!

...

arvoshan.com

நினைவகச் சிப் விலை உயர்வு; ஆப்பிள் பங்குகள் 4% சரிவு – லாப வரம்பு குறையும் என புதிய தலைமை நிர்வாக அதிகாரி எச்சரிக்கை!

...

arvoshan.com

வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள் – இஸ்ரோ அறிவிப்பு

...

arvoshan.com

ChatGPT ஆலோசனையால் வலிப்பு நோய்க்கான மருந்தை நிறுத்தியதாகக் குற்றச்சாட்டு – OpenAI நிறுவனத்துக்கு எதிராக பெற்றோர் வழக்குத் தாக்கல்

...

arvoshan.com

AI தொழில்நுட்ப வளர்ச்சி: மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் 60,000 ஊழியர்களுக்கு தன்னார்வ விலகல் திட்டம்

...

arvoshan.com

செயற்கை நுண்ணறிவு விரிவாக்கத்திற்காக 3,500 கோடி டொலர் பங்கு வெளியீடு – மெட்டா அறிவிப்பு

...

arvoshan.com

பொறியியல் படிக்காமலேயே பறக்கும் காரை உருவாக்கி அசத்திய இளைஞர்!

...

arvoshan.com

அரச நிறுவனங்களுக்கு அவசர சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை!

...

arvoshan.com

இணையம் வழியாக வாசனைகளைப் பரிமாறும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு!

...

arvoshan.com

இணையத்தள உரிமையாளர்களுக்கு இலங்கை CERT முக்கிய சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை!

...

arvoshan.com

ஹோட்டல் முன்பதிவு பாதுகாப்பானதா? Booking.com நிறுவனத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விசாரணை!

...

arvoshan.com

உலகம் முழுவதும் அரச மற்றும் வர்த்தக இணையத்தளங்கள் முடக்கம்! PHP மென்பொருளில் கடுமையான பாதுகாப்புக் குறைபாடு

...

arvoshan.com

செவ்வாய் கிரகத்தின் மர்ம நிலவுகளை ஆய்வு செய்ய ஜப்பானின் புதிய விண்வெளித் திட்டம்!

...

arvoshan.com

தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி AI உள்ளிட்ட 40 தொழில்நுட்பங்களின் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்க சீனா திட்டம்!

...