நாடளாவிய ரீதியில் மூன்று நாட்களுக்கு ஒரு மணிநேர மின்வெட்டு – அனுமதி கோரியது NSO

arvloshan.com

நாடு முழுவதும் ஒக்டோபர் 19 முதல் 21ஆம் திகதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஒரு மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு தேசிய முறைமை இயக்குநர் நிறுவனமான (NSO), இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) அனுமதி கோரியுள்ளது.

இது தொடர்பில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த NSO நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி புத்திக சமரசிங்க, நாட்டை நான்கு வலயங்களாகப் பிரித்து, ஒவ்வொரு வலயத்திலும் ஒரு மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதற்கமைய, இன்று மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலான காலப்பகுதியில் குறித்த மின்வெட்டுகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாளை (20) மற்றும் நாளை மறுதினம் (21) ஆகிய தினங்களிலும் இதேபோன்று ஒரு மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும், முன்மொழியப்பட்டுள்ள மின்வெட்டு நடைமுறைக்கு வருவது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியிலேயே தங்கியுள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

டக்ளஸ் தேவானந்தாவின் யாழ். அலுவலகத்தில் பல மணி நேரம் CID சோதனை

...

arvoshan.com

அல்லைப்பிட்டியில் பேருந்து – முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

...

arvoshan.com

அகுரணை கோர விபத்து: பிரேக் செயலிழந்ததாக சாரதி கூறுவது குறித்து விசாரணை – பொலிஸார் புதிய தகவல்

...

arvoshan.com

நாமல் ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது!

...

arvoshan.com

காட்டு யானை ‘கவன்திஸ்ஸ’ உயிரிழப்பு: விசாரணைக்கு நிபுணர் குழுவை நியமித்தார் ஜனாதிபதி

...

arvoshan.com

கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்தில் ரூ. 6.75 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!

...

arvoshan.com

இரத்மலானையில் 630 போதை மாத்திரைகளுடன் 33 வயது நபர் கைது!

...

arvoshan.com

யானைத் தந்தத்தில் செய்யப்பட்ட நகைகளுடன் திஸ்ஸமஹாராமவில் 46 வயது நபர் கைது!

...

arvoshan.com

இலங்கையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு மணி நேர மின்வெட்டு – நேர அட்டவணை வெளியீடு

...

arvoshan.com

வென். கஸ்ஸப தேரர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு: வென். சுமங்கல தேரரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு

...

arvoshan.com

தாய்லாந்து துணைப் பிரதமருக்கு உரிய மரியாதை இல்லையா? அரசிடம் ஐ.தே.க. கேள்வி

...

arvoshan.com

ஊழல் தடுப்புச் சட்டத் திருத்தத்திற்கு சபாநாயகர் சான்றளிப்பு!

...

arvoshan.com

கொழும்பு துறைமுகத்தின் 280 மில்லியன் டொலர் சீன முதலீட்டுத் திட்டம் இரத்து!

...

arvoshan.com

கவன்­திஸ்ஸ யானையின் மரணம் மீண்டும் நிகழக்கூடாது – சுற்றுச்சூழல் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும்: பிரதமர் ஹரிணி

...

arvoshan.com

கொழும்பு பேரே ஏரியைப் புனரமைக்கும் திட்டம்: 120-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்பு

...